பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துக்குள் திருப்பூர் -7 திட்டம் 41,262 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
உடுமலை : திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆறு திட்டங்களில், விவசாய நிலங்கள், நீர் நிலைகளின் கரைகள், பொது இடங்கள், கோவில் நிலங்கள், தொழிற்சாலை வளாகங்கள், என பல்வேறு பகுதிகளில், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், 2 லட்சம்
 வனத்துக்குள் திருப்பூர் -7  திட்டம் 41,262  ஆயிரம் மரக்கன்றுகள்  நடவு

உடுமலை : திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆறு திட்டங்களில், விவசாய நிலங்கள், நீர் நிலைகளின் கரைகள், பொது இடங்கள், கோவில் நிலங்கள், தொழிற்சாலை வளாகங்கள், என பல்வேறு பகுதிகளில், 10.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், இத்திட்டத்தின் கீழ், 72 இடங்களில், 41 ஆயிரத்து, 262 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.மேலும், நுாற்றுக்கணக்கான நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது.இந்நிலையில், நேற்றுமுன்தினம், குடிமங்கலம் ஒன்றியம், தாசர்பட்டி அருகேயுள்ள விவசாயி, சாரதா, முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், செம்மரம், சந்தனம், குமிழ், புங்கன், பூவரசு, தான்றிக்காய், சவுக்கு, வன்னி, விலா என, 3 ஆயிரத்து, 24 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றிலும் கம்பி வேலி, சொட்டு நீர் பாசனம் என, மரங்களால் வனமாக்கும் வகையில் நடவு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், இலவசமாக மரக்கன்று நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X