பொது செய்தி

இந்தியா

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்காவை கைது செய்தது கண்டிக்கத்தக்கது

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு-''உ.பி.,யில் நடந்த வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா வாத்ராவை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த செயல் சட்டப்படி குற்றமாகும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,'' என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரு குயின்ஸ் சாலையில்

பெங்களூரு-''உ.பி.,யில் நடந்த வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா வாத்ராவை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த செயல் சட்டப்படி குற்றமாகும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,'' என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரு குயின்ஸ் சாலையில் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்காவை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த செயல் சட்டப்படி குற்றமாகும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.பிரியங்காவின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்தது தவறு என்று உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியே கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மவுனம் கலைக்கவில்லை. சம்பவம் குறித்து, உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். அநீதியை தட்டி கேட்கும் கட்சிகளை ஒடுக்க நினைப்பதை நிறுத்த வேண்டும்.வன்முறையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற வேறு கட்சி தலைவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். ஏன் காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. காங்கிரசுக்கு எதிராக மத்திய, மாநில பா.ஜ., அரசுகள் சூழ்ச்சி செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X