உணவகங்களுக்கு உரிமம் அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவகங்களுக்கு உரிமம் அவசியம்

Added : அக் 07, 2021
Share
உடுமலை : உணவகங்கள் உரிமம் பெற்று இயங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.உணவகங்கள், உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். அனைத்து வணிகர்களும், 2022 ஜன., முதல், நுகர்வோருக்கு வழங்கும் விற்பனை ரசீதில், உணவு பாதுகாப்பு துறை சான்று அவசியம் என அச்சிடப்பட வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தி எண்ணெய், ஓட்டல்களில் இருந்து

உடுமலை : உணவகங்கள் உரிமம் பெற்று இயங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.உணவகங்கள், உணவு பாதுகாப்புத்துறையில் உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.

அனைத்து வணிகர்களும், 2022 ஜன., முதல், நுகர்வோருக்கு வழங்கும் விற்பனை ரசீதில், உணவு பாதுகாப்பு துறை சான்று அவசியம் என அச்சிடப்பட வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் பயன்படுத்தி எண்ணெய், ஓட்டல்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. 'பயோடீசல்' தயாரிக்க வசதியாக, ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு, கொள்முதல் செய்யப்படுகிறது.

திருமண மண்டபம், ஓட்டல்களில் மீதமாகும் உணவை, ஏழை, எளிய மக்களுக்கு வழங்க, தன்னார்வ அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும்.உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி பெற்று, விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். உணவக பணியாளர் அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இவ்வாறு, திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X