மெட்ரோ ரயில் திட்டத்தை, ராம்நகர் மற்றும் மாகடிக்கு கொண்டு செல்வதாக பொம்மை அறிவிப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு-மெட்ரோ ரயில் திட்டத்தை, ராம்நகர் மற்றும் மாகடிக்கு கொண்டு செல்வதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதன் சாதகம், பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் பின்னணியில், முதல்வரின் அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக, பா.ஜ., வட்டாரம் தெரிவித்துள்ளது.பா.ஜ.,வுக்கு சக்தி பெங்களூரு உட்பட, வட மாவட்டங்களில், பா.ஜ.,வுக்கு சக்தி அதிகம் உள்ளது.

பெங்களூரு-மெட்ரோ ரயில் திட்டத்தை, ராம்நகர் மற்றும் மாகடிக்கு கொண்டு செல்வதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதன் சாதகம், பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் பின்னணியில், முதல்வரின் அரசியல் தொலைநோக்கு பார்வை உள்ளதாக, பா.ஜ., வட்டாரம் தெரிவித்துள்ளது.பா.ஜ.,வுக்கு சக்தி பெங்களூரு உட்பட, வட மாவட்டங்களில், பா.ஜ.,வுக்கு சக்தி அதிகம் உள்ளது. ஆனால் பழைய மைசூரு பகுதியில், தன் சக்தியை அதிகரிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், பெரும்பான்மை பெற பா.ஜ.,வுக்கு, எட்டு முதல் பத்து இடங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதன்பின் வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களை ஈர்த்து, ஆட்சியை பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. பழைய மைசூரு பகுதிகளில், பா.ஜ.,வின் பலத்தை அதிகரித்துக் கொண்டால், பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர உதவியாக இருக்கும். இதை மனதில் கொண்டே, முதல்வர் பசவராஜ் பொம்மை, இப்போதிருந்தே முயற்சிக்கிறார். அதற்கான முதற்படியாக, பெங்களூரிலிருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ள ராம்நகர் மற்றும் மாகடிக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு செல்வதாக, முதல்வர் அறிவித்துள்ளார். ராம்நகர், மாகடி தொகுதிகள் இரண்டும், ஒக்கலிகர் செல்வாக்குள்ள தொகுதிகளாகும். ம.ஜ.த.,வின் பாதுகாப்பு கோட்டையாகும். இங்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு செல்வதன் மூலம், ஒக்கலிகர் மனதில் இடம் பிடிப்பது, முதல்வரின் திட்டமாகும். அதுமட்டுமின்றி, அபிவிருத்தி விஷயத்தில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை விட, தான் ஒரு படி முன்னே இருப்பதை, மக்களுக்கு உணர்த்துவதும், முதல்வரின் உள் நோக்கம் என, பா.ஜ., வட்டாரம் தெரிவித்துள்ளது. ராம்நகர் மாநகராட்சியை தரம் உயர்த்தவும், மாநில அரசு ஆலோசிக்கிறது. ராஜிவ் சுகாதார பல்கலைக்கழகம் கட்டும் பணிகள், விரைவில் துவங்கப்படும் என, முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். அரசியல் தொலைநோக்கு பார்வையில், ராம்நகர், மாகடிக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விஸ்தரிக்க, முதல்வர் விரும்புகிறார். ஆனால் இது அவ்வளவு எளிதான விஷயமல்ல என, வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நகர ரயில் திட்ட வல்லுனர் சஞ்ஜீவ் தாமன்னனவர் கூறியதாவது:தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், இது முடியக்கூடியதல்ல. அதிக மக்கள் நெருக்கடியுள்ள, பெங்களூரு போன்ற மாநகரங்களுக்கு, மெட்ரோ ரயில் திட்டம் சரியானதாக இருக்கும். ஆனால் பெங்களூரிலிருந்து, 50 - 60 கி.மீ., தொலைவில் உள்ள ஊர்களுக்கு, கொண்டு செல்வது, பொருளாதார ரீதியில் சுமையை ஏற்படுத்தும்.ஒவ்வொரு கி.மீ.,க்கும், 200 கோடி ரூபாய் செலவாகும். திட்டத்தை செயல்படுத்த, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். இவ்வளவு செலவு செய்து திட்டத்தை செயல்படுத்தினாலும் கூட, பெங்களூரை போன்று, ராம்நகர், மாகடியில் பயணியரின் எண்ணிக்கை இருப்பது சந்தேகம்.ஐந்து முதல் 15 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயங்கும். பயணியர் வராவிட்டால், பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நஷ்டமடையும். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும், மெட்ரோ ரயில்களை இயக்குவதானால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டு, மெட்ரோ ரயில்பாதை அமைக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். எந்த வகையில் பார்த்தாலும், இது சுமையை ஏற்படுத்தும் திட்டம் தான். ரயில் இணைப்புஅரசு மனம் வைத்தால், ஏறேழு மாதங்களில், பெங்களூரிலிருந்து, ராம்நகருக்கு அதிக செலவில்லாமல், ரயில் இணைப்பை ஏற்படுத்தலாம். இதற்கு முன் பெங்களூரிலிருந்து, ராம்நகருக்கு தினமும் மெமு ரயில்கள் இயக்கப்பட்டன. கொரோனா உட்பட, சில காரணங்களால், இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புறநகர் ரயில் திட்டமும் கூட, ராம்நகருக்கு செல்லாமல், கெங்கேரி வரை செயல்படுத்தப்படுகிறது.தற்போது ஆட்டோமெடிக் சிக்னல்களை பொருத்தி, லெவல் கிராசிங்குகளை நீக்கிவிட்டால், ஆறேழு மாதங்களில் ராம்நகருக்கு, ரயில் இணைப்பை ஏற்படுத்தலாம். தற்போது ராம்நகர் மக்கள், மைசூரிலிருந்து வரும் ரயில்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. மெட்ரோ ரயில் கெங்கேரிக்கு வர, இத்தனை ஆண்டுகளானது. ராம்நகருக்கு வருவதற்கு, எத்தனை ஆண்டுகள் ஆகுமோ. எனவே புறநகர் ரயில் திட்டத்தில், ராம்நகரை சேர்க்கலாம். இதற்கு அரசியல்வாதிகள் மனம் வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X