பொது செய்தி

இந்தியா

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பெங்களூரு வருகை

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு-மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பெங்களூரு வந்தார்.டில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று பிற்பகல் பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு அவர் வந்தார்.அவரை மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைமை செயலர் ரவிகுமார், மாநில போலீஸ் டி.ஜி.பி., பிரவீண் சூட், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர்

பெங்களூரு-மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பெங்களூரு வந்தார்.டில்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று பிற்பகல் பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு அவர் வந்தார்.அவரை மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில தலைமை செயலர் ரவிகுமார், மாநில போலீஸ் டி.ஜி.பி., பிரவீண் சூட், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், நகர மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் உட்பட பலர் வரவேற்றனர்.ராஜ்பவனில் தங்கியுள்ள அவருக்கு, கவர்னர் விருந்து வழங்கினார்.இன்று சாம்ராஜ்நகர் செல்லும் அவர், மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி சார்பில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மருத்துவமனையை திறக்கவுள்ளார். இதே வேளையில், பிலிகிரி ரங்கநாத சுவாமியையும் தரிசிக்கவுள்ளார்.நாளை, சிக்கமகளூரு மாவட்டம், சிருங்கேரியில் உள்ள சாரதா பீடத்துக்கு சென்று வழிபடுகிறார். ஜனாதிபதி சுற்றுப்பயயணம் மேற்கொள்ளும் பகுதிகளில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X