பொது செய்தி

இந்தியா

திருட்டை ஒழிக்கணும்!

Added : அக் 07, 2021
Share
Advertisement
'மனித இனத்திற்கு பெருத்த இழிவான வேலையாக, கலாசார சீரழிவாக, பெற்ற குழந்தையை தகப்பனே விற்கலாமா... இந்த கேடு கெட்ட ஜென்மம் தேவையா... இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது'ன்னு அசம்பிளி மேடம் கோபமாக எதிர்ப்பை காட்டி இருக்குறார். உழைத்து வாழ்வதில் தான் உலகில் கோல்டன் சிட்டியின் பெருமை இருந்தது. ஆனால், பெண் குழந்தையை விற்கும் கேவலமான தொழிலுக்கு ஆஷா ஊழியர்கள்

'மனித இனத்திற்கு பெருத்த இழிவான வேலையாக, கலாசார சீரழிவாக, பெற்ற குழந்தையை தகப்பனே விற்கலாமா... இந்த கேடு கெட்ட ஜென்மம் தேவையா... இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது'ன்னு அசம்பிளி மேடம் கோபமாக எதிர்ப்பை காட்டி இருக்குறார். உழைத்து வாழ்வதில் தான் உலகில் கோல்டன் சிட்டியின் பெருமை இருந்தது. ஆனால், பெண் குழந்தையை விற்கும் கேவலமான தொழிலுக்கு ஆஷா ஊழியர்கள் உடந்தையாகலாமான்னு, முன் களப்பணியாளர் தொழிலாளர் இனத்துக்கே அவமானத்தை உருவாக்கிட்டாங்க. ஒரு கிராமத்தில் நடந்த இச்செயல் சிட்டிக்குள்ளேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எச்சரிக்கையாக இருக்க, நகரையே பேச வைத்திருக்கு. குழந்தை வளர்க்க விரும்புறவங்க சட்ட விதிமுறைப்படி தத்து எடுக்க வழிமுறை இருக்கையில், திருட்டு தொழில் எதுக்கு? ஏற்கனவே ரா.பேட்டையிலும் குழந்தை திருட்டு நடந்த சம்பவமும் உள்ளது!ஏரி நிரம்பிடுச்சு!பாலாற்றின் பேத்தமங்களா ஏரி நிரம்பி வழியுது. இந்த காட்சியை காண கோல்டு சிட்டிக்காரங்க ஆர்வமாக பார்க்க வந்து போறாங்க. கோல்டு சிட்டி மக்களுக்கு குடிநீருக்காக உருவாக்கப்பட்ட ஏரியின் நீரை மறுபடியும் கிடைக்க செய்வார்களா; அதுக்கான திட்டம் நிறைவேறுமா?விவசாயிகள் பயிர் தொழிலுக்கு பயன்படுத்துவோம்னு சொல்லி மகிழ்கிறவங்க, குடிநீர் பிரச்னையை தீர்ப்பாங்களா... பேருக்கு தான் இது இப்பவும் குடிநீர் திட்டத்தில் இருக்குது. ஆனால் தங்கமா நகரின் தாகத்தை தணிக்க யாரும் உறுதிபடுத்தலையே.சீர்வரிசை அர்ப்பணித்து பூஜை செய்தவர்கள், குடி நீருக்கு வழியை ஏற்படுத்த வேணாமான்னு தணியாத தாகத்தில் தத்தளிக்கிறவங்க கேட்கிறாங்க.பாழாகிப்போன பேத்தமங்களா ஏரியின் குடிநீர் சுத்திகரிப்பு 'பம்ப் ஹவுஸ்' சீரிழந்துள்ளதை புனரமைக்க கவனம் செலுத்த வேணும்னு பொறுப்பானவங்களை வேண்டிவிரும்பி கேட்குறாங்க!அலட்சியப்படுத்தலாமா?அரசு வழங்கும் முதியோர், விதவை உதவித் தொகைகளை பேத்தமங்களா தபால் துறையின் வங்கி ஊழியர்கள் பட்டுவாடா செய்யாமல் அலைகழிக்க செய்கிறார்களாம். உதவித் தொகை வந்துள்ளதா என கேட்டு விசாரிக்க வருவோரை அவமானம் படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.தபால் துறையின் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதா என்று பார்த்து சொல்லுமாறு பணிவோடு அணுகினால், 'சர்வர்' வேலை செய்யவில்லை என கூறி, அதட்டலான பதில்களால் விரட்டுகிறார்களாம்.அரசு ஊழியர்களான தபால்காரர்கள் பொறுப்பான பதிலை தராமல், இழிவாக பேசுவதாக மேலிட ஆபிசர்களுக்கு புகார் கூறியதோடு, முதியோர்களை அவமானப்படுத்தியவர்கள் மீது உரிய ஆக் ஷன் எடுக்க வேண்டுமென கிராம பஞ்சாயத்துக்காரங்க போராட்டம் நடத்தினாங்க.மூன்று நான்கு மாதமாக உதவித்தொகை கிடைக்காதவர்களை ஒன்று திரட்டி நியாயம் கேட்க போறாங்களாம்!தங்கநகரை அழிக்க திட்டம்?ஆபத்தான அணுக்கழிவை கூடங்குளத்தில் வைக்க வேண்டாம் என, அங்கே போராடுறாங்க. இந்த நச்சுத் தன்மை மிக்க அணுக்கழிவை, பாதாள தங்கச் சுரங்கத்துக்குள் வைக்கப் போறதா பல வருஷமா மிரட்டலா இருந்து வருது. தங்கச் சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் தொழிலை செய்யாமல் 21 வருஷமா காலத்தை வீணடிக்கும் உள்நோக்கம், அணுக் கழிவு கொட்டுவதற்கு தானோ என அறிவியல் அறிஞ்சவங்க வருந்துறாங்க! உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தங்க நகரை அழிக்கவா அணுக்கழிவை கொட்ட போறாங்கன்னு ஏதோ ஒரு 'டிவி' சேனலில் தகவல் கசிந்திருக்குது!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X