பொது செய்தி

இந்தியா

''கார் டிரைவரிடம் நான் தகராறு செய்யவில்லை,'' என நடிகை சஞ்சனா கல்ராணி விளக்கம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு-''கார் டிரைவரிடம் நான் தகராறு செய்யவில்லை,'' என நடிகை சஞ்சனா கல்ராணி விளக்கம் கொடுத்துள்ளார். பெங்களூரில் நேற்று முன்தினம் நடிகை சஞ்சனா கல்ராணி படப்பிடிப்புக்காக, 'ஓலா' காரில் சென்றார். அப்போது காரில் 'ஏசி' போடுமாறு கூறி தன்னிடம் தகராறு செய்ததாக ஆர்.ஆர். நகர் போலீசில் ஓலா டிரைவர் மணி புகார் அளித்துள்ளார்.இது குறித்து விளக்கம் அளித்து, நடிகை சஞ்சனா

பெங்களூரு-''கார் டிரைவரிடம் நான் தகராறு செய்யவில்லை,'' என நடிகை சஞ்சனா கல்ராணி விளக்கம் கொடுத்துள்ளார். பெங்களூரில் நேற்று முன்தினம் நடிகை சஞ்சனா கல்ராணி படப்பிடிப்புக்காக, 'ஓலா' காரில் சென்றார். அப்போது காரில் 'ஏசி' போடுமாறு கூறி தன்னிடம் தகராறு செய்ததாக ஆர்.ஆர். நகர் போலீசில் ஓலா டிரைவர் மணி புகார் அளித்துள்ளார்.இது குறித்து விளக்கம் அளித்து, நடிகை சஞ்சனா கல்ராணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:காரில், 'ஏசி' போடுமாறு நான் கேட்டதற்கு டிரைவர் முடியாது என காட்டமாக கூறினார். அதையே அவர் பவ்வியமாக, 'கொரோனா விதிமுறை உள்ளதால், 'ஏசி' போட அனுமதியில்லை' என கூறவில்லை. அடாவடியாக பேசினார்.கார் புக் செய்யும் போது, 'ஏசி' காரைத் தான் புக் செய்தேன். அந்த கார் தான் வேண்டும் என்றேன். அதற்கான கட்டணமும் அதிகம் கொடுக்கிறேன். அதனால் தான், 'ஏசி' வேண்டும் என்றேன்.ஆனால் அவரோ 'ஏசி' போட தனி கட்டணம் தர வேண்டும் என்று கூறியதோடு, அதிகம் பேசினால் நடுரோட்டில் இறக்கி விட்டு விடுவேன் என்றார்.அவர் அவ்வாறு கூறியதும் எனக்கு பயம் வந்து விட்டது. அவரை நான் மரியாதை இல்லாமல் ஒருமையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் சொன்ன இடத்துக்கு செல்ல இரட்டை கட்டணம் கேட்டார். அதற்கு நான் 10 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமா என கேட்டேன். என்னை பற்றி இல்லாத ஒன்றை கூறி புகார் அளித்துள்ளார். அதில் உண்மை இல்லை.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் ஓட்டுனர்கள், இதுபோல அடாவடியாகத் தான் செயல்படுகின்றனர். அதுவும், கொரோனா கெடுபிடிகள் வந்த பிறகு, அவர்கள் வைத்தது தான் வரிசையாக இருக்கிறது.நுாற்றுக்கு, 99 சதவீத ஓட்டுகள், வாடிக்கையாளர்களிடம் அன்புடன் பழகுவதே இல்லை என, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X