பொது செய்தி

இந்தியா

"மேகதாது திட்டம், கர்நாடகாவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் உதவியாக இருக்கும்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஹாசன்-"மேகதாது திட்டம், கர்நாடகாவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் உதவியாக இருக்கும். நுாற்றாண்டு பழமையான காவிரி நதிநீர் விவாதத்துக்கும், முடிவு கிடைக்கும்," என நீர் பாசன வல்லுனர் யோகேந்திரா தெரிவித்தார்.ஹாசனில் இவர் நேற்று கூறியதாவது:அர்க்காவதி, காவிரி ஆறுகள் சங்கமமாகும் 3.5 கி.மீ., தாழ்வான பகுதியில், கனகபுராவின் மஹாலி கிராமம் அருகில், காவிரி நீர்ப்பாசன

ஹாசன்-"மேகதாது திட்டம், கர்நாடகாவுக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கும் உதவியாக இருக்கும். நுாற்றாண்டு பழமையான காவிரி நதிநீர் விவாதத்துக்கும், முடிவு கிடைக்கும்," என நீர் பாசன வல்லுனர் யோகேந்திரா தெரிவித்தார்.ஹாசனில் இவர் நேற்று கூறியதாவது:அர்க்காவதி, காவிரி ஆறுகள் சங்கமமாகும் 3.5 கி.மீ., தாழ்வான பகுதியில், கனகபுராவின் மஹாலி கிராமம் அருகில், காவிரி நீர்ப்பாசன பகுதியில், மேகதாது திட்டம் செயல்படுத்தப்படும். இது கடல் மட்டத்திலிருந்து, 349 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இடம் அணை கட்ட தகுந்த இடமாகும்.கர்நாடக அரசு, ஏற்கனவே விரிவான திட்டம் தயாரிக்க, சில நிபந்தனைகளுடன் மத்திய அரசிடம், அனுமதி பெற்றுள்ளது. ஆனால் தமிழகம் முட்டுக்கட்டை போடுவதால், 9,000 கோடி ரூபாய் செலவிலான திட்டம் தாமதமாகிறது. மேகதாதுவில் 67 டி.எம்.சி., தண்ணீரை சேமித்து, பெங்களூரு உட்பட, பல நகரங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதுடன், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இதுவாகும்.ஆண்டிலிருந்து, ஆண்டுக்கு மழையின் அளவில் வித்தியாசம் ஏற்படுகிறது. தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசன பகுதிகளில், அதிக மழை பெய்து, கர்நாடகாவில் குறைவான மழை பெய்தாலும், தண்ணீர் திறந்து விட கட்டாயத்தில், கர்நாடகா உள்ளது.காவிரி நடுவர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, ஆண்டு தோறும் 177 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு, கர்நாடகா திறந்து விட வேண்டும். கர்நாடகாவின் பங்கு தண்ணீர் 285 டி.எம்.சி., ஆகும். இவ்வளவு தண்ணீரை சேகரிக்கும் வசதி, கர்நாடகாவில் இல்லை. தண்ணீர் சேகரிப்பு திறனை அதிகரிக்க, மேகதாது அணை கட்ட வேண்டிய கட்டாயம் கர்நாடகாவுக்கு உள்ளது.அணை கட்டுவதால், தண்ணீரை சேகரித்து தமிழகத்துக்கு, தண்ணீர் திறந்து விடவும், உதவியாக இருக்கும். கர்நாடக பங்கு நீரை, பெங்களூரு, ராம்நகர் மாவட்டங்களுக்கு, குடிநீராக பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X