ஒரே குடும்பத்தில் நான்கு பேர் தற்கொலை செய்த வழக்கில் புதிய தகவல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பெங்களூரு-வெளியாகி உள்ளது. தற்கொலைக்கு செய்வதற்கு முன், தந்தையை கொல்ல மகன் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.பெங்களூரு திகளரபாளையாவில் செப்டம்பர் 17ல் ஒன்பது மாத குழந்தையை கொன்று நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரியவந்தது. தாய், இரு மகள்கள், ஒரு மகன் தற்கொலை செய்து கொண்டனர். குடும்பத் தலைவரான பத்திரிகையாளர் சங்கர், வௌியூர் சென்றிருந்த போது இந்த துயர

பெங்களூரு-வெளியாகி உள்ளது. தற்கொலைக்கு செய்வதற்கு முன், தந்தையை கொல்ல மகன் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு திகளரபாளையாவில் செப்டம்பர் 17ல் ஒன்பது மாத குழந்தையை கொன்று நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரியவந்தது. தாய், இரு மகள்கள், ஒரு மகன் தற்கொலை செய்து கொண்டனர். குடும்பத் தலைவரான பத்திரிகையாளர் சங்கர், வௌியூர் சென்றிருந்த போது இந்த துயர முடிவை அவர்கள் எடுத்தனர். அவர்களின் கொலை முயற்சியில் தப்பிய குழந்தை இப்போது உறவினர்கள் வசம் உள்ளது.அழுகிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்டன. தற்கொலை செய்த மதுசாகர், சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக எழுதிய கடிதத்தை வைத்திருந்தனர்.இதை வைத்து, மூன்று பேரின் தந்தையான பத்திரிகையாளர் சங்கர் மற்றும் மருமகன்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தனக்கும் தன் தாய், சகோதரிகளுக்கும் இடையூறு அளித்து வந்த தந்தை சங்கரை கொன்று விட்டு தற்கொலை செய்து கொளள மகன் மதுசாகர் திட்டமிட்டது தெரியவந்துள்ளது.செப்டம்பர் 12ல் மதுசாகரின் தாய் பாரதி, சகோதரிகள் சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் மதுசாகர் அன்று தற்கொலை செய்து கொள்ளவில்லை. அன்று தாய், சகோதரிகளின் சாவுக்கு காரணமான தந்தையை கொல்ல மதுசாகர் முடிவு செய்துள்ளார்.எனவே தந்தை சங்கருக்கு 10 லட்சம் தருவதாக கூறி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மூன்று முறை போன் செய்தும் சங்கர் செல்லவில்லை. அதன் பிறகு தான் மதுசாகர் தற்கொலை செய்துள்ளார்.மதுசாகரின் மொபைல் போன் அழைப்புகள், வாட்ஸ் ஆப் சாட்டிங் போன்ற தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் போது சங்கர் கூறி தகவல்கள் அனைத்தும் ஒத்துபோகின்றன.இதனால் தற்கொலைக்கு முன் மது சாகர் தந்தையை கொல்ல திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கில் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X