மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை

Added : அக் 07, 2021
Share
Advertisement
தட்சிண கன்னடா--ஊழியர்கள் மீதான கோபத்தில், தந்தை துப்பாக்கியால் சுட்டதில், மகன் படுகாயம் அடைந்தார்.தட்சிண கன்னடா, மங்களூரு நகரில் உள்ள மோர்கன் கேட்டில் தனியார் சரக்கு ஏற்றும் நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜேஷ் பிரபு, 45. இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் சந்துரு மற்றும் அஷ்ரப் ஆகிய இரண்டு ஊழியர்களுக்கும், உரிமையாளர் ராஜேஷ் பிரபுவுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு

தட்சிண கன்னடா--ஊழியர்கள் மீதான கோபத்தில், தந்தை துப்பாக்கியால் சுட்டதில், மகன் படுகாயம் அடைந்தார்.தட்சிண கன்னடா, மங்களூரு நகரில் உள்ள மோர்கன் கேட்டில் தனியார் சரக்கு ஏற்றும் நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜேஷ் பிரபு, 45. இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் சந்துரு மற்றும் அஷ்ரப் ஆகிய இரண்டு ஊழியர்களுக்கும், உரிமையாளர் ராஜேஷ் பிரபுவுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு சம்பளம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.அப்போது ராஜேஷ் பிரபுவின் மகன் சுதீந்திரா, 17, ஊழியர்களுடன் சண்டை போட்டார். இதனால் ஊழியர்கள் வெளியே சென்று விட்டனர். அதன் பிறகும் ஊழியர்களுடன் சுதீந்திரா சண்டை போட்டதில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜேஷ் பிரபு, உரிமம் பெற்ற தன் கைத்துப்பாக்கியுடன் வெளியே வந்து அவர்களை கலைக்கும் நோக்கில் சுட்டார்.இவ்வாறு இரண்டு முறை சுட்டதில், ஒரு குண்டு சுதீந்திராவின் தலையில் பட்டது. படுகாயம் அடைந்து அவர் விழுந்ததும், அங்கிருந்தவர்கள் ஓடி விட்டனர்.படுகாயம் அடைந்த சுதீந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து பந்தேஸ்வரா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X