பொது செய்தி

தமிழ்நாடு

'வந்தே பாரத்' அதிவேக ரயில் பெட்டி நவீன தொழில்நுட்பத்தில் மாற்றியமைப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
'வந்தே பாரத்' அதிவேக ரயில் பெட்டி வடிவமைப்பு, ஐ.சி.எப்., தொழிற்சாலையில் நவீன தொழில் நுட்பத்தில் மேலும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில், 160 கி.மீ., வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.இடையில், தயாரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

'வந்தே பாரத்' அதிவேக ரயில் பெட்டி வடிவமைப்பு, ஐ.சி.எப்., தொழிற்சாலையில் நவீன தொழில் நுட்பத்தில் மேலும் மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில், 160 கி.மீ., வேகத்தில் இயங்கும் வந்தே பாரத் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.இடையில், தயாரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இங்கு மீண்டும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க, ரயில்வே வாரியம் அனுமதிஅளித்துள்ளது. இத்திட்டத்தில் 30 வந்தே பாரத் ரயில்களுக்கான, 480 பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. ஆரம்ப கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. முன்பு தயாரிக்கப்பட்டு, இயக்கத்தில் உள்ள வந்தே பாரத் ரயில் பெட்டிகளைவிட, புதிய தயாரிப்பு பெட்டிகள் மேலும் நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட உள்ளன.இதற்காக, எல்.எச்.பி., பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை 42 கோடி ரூபாய் செலவில், கூடுதல் வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது. முதலில், ஒரு பெட்டிக்கான அடித்தள கட்டமைப்பு நவீன தொழில் நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, அதன் பின் முழு பெட்டியும் தயாரிக்கப்பட உள்ளது.உரிய சோதனைக்கு பின், இதே புதிய வடிவில் தேவையான பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் முதல் கட்டமாக, ஒரு ரயிலுக்கான 16 பெட்டிகள், 2022 மார்ச் 31க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X