பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையங்களில் மரக்கன்றுகள் நடவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை- தமிழக ரயில்வே போலீசாரால், 47 ரயில் நிலையங்களில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.ரயில் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை பாதுகாப்பு, புவி வெப்பமயமாவதை தடுக்கும் நோக்கில் சென்னை, திருச்சி ரயில்வே போலீஸ் காவல் மாவட்டங்களின் எல்லைக்கு உட்பட்ட, 47 நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்புகளில் நேற்று மரக்கன்றுகள்

சென்னை- தமிழக ரயில்வே போலீசாரால், 47 ரயில் நிலையங்களில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.ரயில் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை பாதுகாப்பு, புவி வெப்பமயமாவதை தடுக்கும் நோக்கில் சென்னை, திருச்சி ரயில்வே போலீஸ் காவல் மாவட்டங்களின் எல்லைக்கு உட்பட்ட, 47 நிலையங்கள் மற்றும் போலீஸ் குடியிருப்புகளில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டன.சென்னை, ராயபுரம், கல்மண்டபம் ரயில்வே போலீஸ் குடியிருப்பில், தமிழக ரயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர் மரக்கன்றுகள் நட்டு, விழாவை துவக்கி வைத்தார்.ஐ.ஜி., கல்பனா நாயக், டி.ஐ.ஜி., ஜெயகவுரி, எஸ்.பி., இளங்கோ ஆகியோர் விழாவில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். எம்.ஜி.ஆர்., சென்ட்ரல், எழும்பூர், செங்கல்பட்டு, கொருக்குப்பேட்டை, பெரம்பூர், ஜோலார்பேட்டை, உட்பட, 47 நிலையங்களிலும், போலீஸ் குடியிருப்புகளிலும், ரயில்வே போலீசாரால் நேற்று 5,730 மரக்கன்றுகள் நடப்பட்டன.ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் நடைபெறும் அனைத்து விதமான குற்ற நடவடிக்கைகள் சம்பந்தமான தகவல்களை, ரயில்வே போலீஸ் உதவி மைய எண், 1512 மற்றும், 9962500500 என்ற மொபைல் போன் எண்ணிலும் பயணியர் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X