பொது செய்தி

தமிழ்நாடு

தண்டவாளத்தில் விரிசல் ரயில்கள் தாமதம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
தாம்பரம்--ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால், ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில், தாம்பரம் ரயில் நிலையம் அடுத்த, இரும்புலியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதாக, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் ஓட்டுனர், நேற்று அதிகாலை 4:45 மணிக்கு, ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்

தாம்பரம்--ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால், ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில், தாம்பரம் ரயில் நிலையம் அடுத்த, இரும்புலியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதாக, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரயில் ஓட்டுனர், நேற்று அதிகாலை 4:45 மணிக்கு, ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.இதனால், ஆங்காங்கே வழியில் மின்சார ரயில்களும், தாம்பரம்- - செங்கல்பட்டு மார்க்கத்தில், சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார் ஆகிய பகுதிகளிலும் விரைவு ரயில்களும் நிறுத்தப்பட்டன.அடுத்த சில நிமிடங்களில், அனைத்து ரயில்களின் வழித்தடங்களும், வேறு 'டிராக்'கிற்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து, ரயில்வே பொது பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாலை 5:25 மணியளவில் தண்டவாள விரிசலை சரி செய்யும் பணி துவங்கியது.அரை மணிநேரத்திற்கு பின், தண்டவாளம் முழுமையாக சீரமைக்கப்பட்டதால், ரயில் போக்குவரத்து முழுமையாக சீரானது. இதனால், புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு, காலதாமதமாக வந்தடைந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X