சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.3 கோடி கேட்டு 'மாஜி' எஸ்.ஐ., கடத்தல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை--சென்னையில் 3 கோடி ரூபாய் கேட்டு, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் மூசா, 76; சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர்.பல

சென்னை--சென்னையில் 3 கோடி ரூபாய் கேட்டு, முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் மூசா, 76; சென்னையில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து, விருப்ப ஓய்வு பெற்றவர்.பல வழக்குகள்பின், 'மூசா குலோவேட் டிரைட் விங்ஸ்' என்ற நிறுவனம் துவங்கி, சந்தன மரம் உள்ளிட்ட வியாபாரம் செய்து வந்தார். இதில், பல வழக்குகளை சந்தித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்:கிழமை மூசா, கானாத்துாரில் உள்ள மகன் பஷீர் வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் காரை மறித்த நான்கு பேர் கும்பல், மூசாவை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது.தன் வீட்டிற்கு வர புறப்பட்ட தந்தை மாயமானது தொடர்பாக, கானாத்துார் போலீசில் பஷீர் புகார் அளித்தார்.இந்நிலையில், திங்கட்கிழமை மூசாவின் மற்றொரு மகன் ஷெரிப்மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், '3 கோடி ரூபாய் தந்தால் தான், மூசாவை விடுவிப்போம்' எனக்கூறி உள்ளார்.பின், இரண்டு நாள் நடந்த பேச்சில், 25 லட்சம் ரூபாய் தருவதாக பஷீர் கூறி உள்ளார். இந்த தகவலை போலீசாரிடமும் பஷீர் தெரிவித்தார்.இதையடுத்து, போலீசாரின் வழிகாட்டுதல்படி, எழும்பூர், மியூசியம் அருகில் கடத்தல்காரர்களிடம் 25 லட்சம் ரூபாயை பஷீர் கொடுத்தார்.தப்பி செல்ல முயற்சிஅடுத்த சில நிமிடங்களில், அதே பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' அருகே, மூசாவை இறக்கி விட்டு, கும்பல் தப்பி செல்ல முயன்றது.அப்போது, தனிப்படை போலீசார் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்தனர். இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த குமார், 48, சீர்காழியைச் சேர்ந்த பிரகாஷ், 35, ஆகிய இருவர் சிக்கினர்; இரண்டு பேர் தப்பினர். அவர்களிடம் இருந்து, 25 லட்சம் ரூபாய், ஒரு துப்பாக்கி, இரண்டு கார், மூன்று மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக, போரூரைச் சேர்ந்த சங்கீதா, 28, என்பவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:மூசா பணி புரிந்தபோது, இவர் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின், 1982ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று, தனியாக தொழில் நிறுவனம் துவங்கினார். இவரின், வலது கையாக செயல்பட்டவர் குமார். மூசாவிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பது தெரிந்து, லாபத்தில் பங்கு கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு கட்டத்தில், குமாரை வேலையில் இருந்து நீக்க மூசா முடிவு செய்துள்ளார். அதற்குமுன், கோடிக்கணக்கில் பணம் சுருட்ட குமார் திட்டமிட்டார்.25 லட்சம் ரூபாய்இந்நிலையில், மூசா தன் மகன் பஷீர் வீட்டுக்கு செல்வது அறிந்த குமார், வழியில் தன் கூட்டாளிகளுடன் துப்பாக்கி முனையில் மூசாவை கடத்தினார். சென்னையில், பல இடங்களுக்கு காரிலே சுற்றி, 3 கோடி ரூபாய் தந்தால் விட்டுவிடுவதாக கூறினர். அதில் உடன்பாடு எட்டாததால், போரூரில் சங்கீதா நடத்தி வரும், போதை மறுவாழ்வு மையத்தில் மூசாவை அடைத்து வைத்தனர். எங்கள் வழிகாட்டுதலில், 25 லட்சம் ரூபாய் கொடுக்க முயன்றபோது சிக்கினர். சங்கீதாவின் கணவர் உள்ளிட்ட இருவரை தேடி வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X