சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்திவாக்கம் மேம்பாத்தில் மழைநீர் குழாய்கள் மாயம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
எண்ணுார்-கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருந்து, மழைநீர் வெளியேறும் குழாய்கள், சேதமடைந்து மாயமாகி உள்ளன.சென்னை, எண்ணுார், எர்ணாவூர் மற்றும் பர்மா நகர் இணையும் வகையில், மூன்று வழி கத்திவாக்கம் மேம்பாலம், எண்ணுாரில் உள்ளது. இதன் வழியாக, அனல்மின் நிலையம், உருக்காலை, கனரக வாகனம் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றிற்கு, ஊழியர்கள் சென்று வருவர். தவிர, எண்ணுார் வாசிகள்,
 கத்திவாக்கம் மேம்பாத்தில் மழைநீர் குழாய்கள் மாயம்

எண்ணுார்-கத்திவாக்கம் மேம்பாலத்தில் இருந்து, மழைநீர் வெளியேறும் குழாய்கள், சேதமடைந்து மாயமாகி உள்ளன.சென்னை, எண்ணுார், எர்ணாவூர் மற்றும் பர்மா நகர் இணையும் வகையில், மூன்று வழி கத்திவாக்கம் மேம்பாலம், எண்ணுாரில் உள்ளது. இதன் வழியாக, அனல்மின் நிலையம், உருக்காலை, கனரக வாகனம் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றிற்கு, ஊழியர்கள் சென்று வருவர். தவிர, எண்ணுார் வாசிகள், திருவொற்றியூருக்கு வருவதற்கு, இந்த பாலமும் முக்கிய வழியாக உள்ளது. பாலத்தில் தேங்கும் மழை நீர் வடியும் அளவிற்கு, பக்கவாட்டில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், சில சமூக விரோதிகள், பிளாஸ்டிக் குழாய்களை உடைத்து எடுத்து சென்று விடுகின்றனர். இதனால், குழாய் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது.மழை நேரத்தில், மானவரியாக மழை நீர் மேம்பாலத்தில் பக்கவாட்டில் சிதறி விழுவதால், மேம்பாலத்தின் கீழ் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மேம்பாலத்தில் உடைந்திருக்கும், மழை நீர் வெளியேறும் குழாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X