பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறி தி.மு.க., கட்டடம் மாநகராட்சி நோட்டீஸ்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை பைபாஸ்ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் தி.மு.க., தொழிற்சங்க கட்டடம் அனுமதியின்றி கட்டப்படுவதையொட்டி நிர்வாகத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இக்கட்டுமானத்திற்கு நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. மாநகராட்சியிலும் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாநகராட்சி தெற்கு

மதுரை : மதுரை பைபாஸ்ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் தி.மு.க., தொழிற்சங்க கட்டடம் அனுமதியின்றி கட்டப்படுவதையொட்டி நிர்வாகத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இக்கட்டுமானத்திற்கு நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. மாநகராட்சியிலும் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் சுரேஷ்குமார் கட்டுமான பணிகளை நிறுத்த போக்குவரத்து கழக நிர்வாக மேலாளர் திருவெம்பலம்பிள்ளைக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.நிர்வாக மேலாளர் கூறுகையில், “இதுகுறித்து ஆய்வு செய்து பதில் அளிக்கப்படும்,'' என்றார்.

பா.ஜ., தொழிற்சங்கம் சார்பிலும் கட்டடத்திற்கு நிலம் ஒதுக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.வாக்குவாதம்மாற்று தொழிற்சங்க நிர்வாகி கருப்பு, ''அனுமதியின்றி மரங்கள் வெட்டியது குற்றம். கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்,'' எனக்கூறி தி.மு.க., தொழிற்சங்கத்தினரிடம் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X