பொது செய்தி

தமிழ்நாடு

குன்னத்தூர் சத்திரம் கடை ஒதுக்கீடு; உயர்நீதிமன்றத்தில் உறுதி

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை டவுன் குன்னத்துார் சாம்பையன் சத்திரம் வாடகைதாரர்கள் நலச் சங்கம் தலைவர் அலாவுதீன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை குன்னத்துார் சத்திரத்தில் 21 பேர் வாடகைக்கு கடைகள் நடத்தினர். பழமையான சத்திரத்தின் கட்டடத்தை 2006 ல் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புது கட்டட கடைகள் ஒதுக்கீட்டில் 21 பேருக்கு முன்னுரிமை

மதுரை : மதுரை டவுன் குன்னத்துார் சாம்பையன் சத்திரம் வாடகைதாரர்கள் நலச் சங்கம் தலைவர் அலாவுதீன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை குன்னத்துார் சத்திரத்தில் 21 பேர் வாடகைக்கு கடைகள் நடத்தினர். பழமையான சத்திரத்தின் கட்டடத்தை 2006 ல் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புது கட்டட கடைகள் ஒதுக்கீட்டில் 21 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவாதம் அளித்தது.

தற்போது பணி முடிந்துவிட்டது. கடைகள் ஒதுக்கீட்டிற்கான ஏலம் இன்று (அக்.,7) நடக்கிறது. ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: ஒதுக்கீட்டில் 21 கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள்: இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கை முடித்து வைக்கிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X