பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டு சாலையில் வாகன நெரிசல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
செங்குன்றம்,--கூட்டுச்சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு, போலீசார் தீர்வு கண்டனர்.சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.இந்த சந்திப்பில், சாலை மிக மோசமாக சேதமடைந்து, சமதளமற்ற நிலையில் இருப்பதே இதற்கு காரணம். இதனால், பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அந்த இடத்தை கடந்து

செங்குன்றம்,--கூட்டுச்சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு, போலீசார் தீர்வு கண்டனர்.சென்னை, செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.இந்த சந்திப்பில், சாலை மிக மோசமாக சேதமடைந்து, சமதளமற்ற நிலையில் இருப்பதே இதற்கு காரணம். இதனால், பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அந்த இடத்தை கடந்து செல்ல முடியாமல் திணறுவதும், திடீரென உதிரிபாகங்கள் உடைந்து, பழுதாகி நடுரோட்டில் நிற்பதும் தொடர்ந்தது.இப்பிரச்னையால், செங்குன்றம் நெல் மார்க்கெட் வரையிலும், போக்குவரத்து நெரிசல் நீடித்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார், சாலையை சீரமைக்க முடிவு செய்தனர். அதற்காக நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தனர்.அந்த பகுதியில், சில தினங்களுக்கு முன், சாலை சமதளமாக அமைக்கப்பட்டு, வாகனங்கள் உரிய பாதையில் செல்ல தடுப்பு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, அத்து மீறும் வாகன ஓட்டிகளை கண்காணித்து, போக்குவரத்து சீரமைப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால், நீண்ட நெரிசல் பிரச்னைக்கு, தீர்வு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X