பொது செய்தி

தமிழ்நாடு

பலவீனமான மின் மாற்றி: சீரமைக்க கோரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை, மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே, மழை நீர் வடிகாலை ஒட்டி இருந்த மின் மாற்றி உறுதியிழந்து, நேற்று காலை 7:00 மணி அளவில் திடீரென அங்கிருந்த வடிகால் மீது சரிந்து நின்றது.அதைக் கண்ட பொதுமக்கள், மாதவரம் போக்குவரத்து போலீசார் மற்றும் மின் வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.போக்குவரத்து போலீசார் அங்கு

சென்னை, மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் அருகே, மழை நீர் வடிகாலை ஒட்டி இருந்த மின் மாற்றி உறுதியிழந்து, நேற்று காலை 7:00 மணி அளவில் திடீரென அங்கிருந்த வடிகால் மீது சரிந்து நின்றது.அதைக் கண்ட பொதுமக்கள், மாதவரம் போக்குவரத்து போலீசார் மற்றும் மின் வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.போக்குவரத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாதவரம் மின் வாரியத்தினர், இரண்டு கிரேன் மூலம், சரிந்த மின் மாற்றியை நிமிர்த்தி சீரமைத்தனர். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. பருவ மழை துவங்க உள்ள நிலையில், இதுபோன்ற பலவீனமான மின் மாற்றி, மின் கம்பம் மற்றும் மின் இணைப்புகளை, வாரியத்தினர் கண்காணித்து சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X