திருவொற்றியூர் சுரங்கப்பாதை பணி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவொற்றியூர் சுரங்கப்பாதை பணி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு

Added : அக் 07, 2021
Share
திருவொற்றியூர்-திருவொற்றியூர் சுரங்கப்பாதை பணிக்காக, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவொற்றியூர், அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், திருவொற்றியூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில், தண்டவாளத்தின் கீழ், சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.இதற்காக, திருவொற்றியூர் மேற்கு பக்கம், அண்ணா

திருவொற்றியூர்-திருவொற்றியூர் சுரங்கப்பாதை பணிக்காக, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருவொற்றியூர், அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில், திருவொற்றியூர் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில், தண்டவாளத்தின் கீழ், சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது.இதற்காக, திருவொற்றியூர் மேற்கு பக்கம், அண்ணா நகர், கிளாஸ் பேக்டரி சாலையில் உள்ள கடை மற்றும் குடியிருப்புகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும், நேற்று காலை 117 கட்டடங்களுக்கு, ரயில்வே அதிகாரிகள் 'நோட்டீஸ்' வழங்க வந்தனர்.அப்போது, சுரங்கப்பாதை பணிக்கு தேவையான இடங்களை மட்டும் கையகப்படுத்த வேண்டும் என, மக்கள் தெரிவித்தனர்.இருப்பினும், கிளாஸ் பேக்டரி சாலையை தவிர்த்து, உட்புற குடியிருப்புகளுக்கும் 'நோட்டீஸ்' வழங்க இருந்ததாக தெரிகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், நோட்டீசை வாங்க மறுத்து, அண்ணாமலை நகர் கேட் சந்திப்பில், அதிகாரிகளை சூழ்ந்து, மறியலில் ஈடுபட்டனர்.பின், எண்ணுார் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார், அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, ரயில்வே கேட்டை ஒட்டிய, மூன்று கட்டடங்களுக்கு, அதிகாரிகள் 'நோட்டீஸ்' ஒட்டினர். பொதுமக்கள் எதிர்ப்பு மற்றும் சில நாட்கள் அவகாசம் கோரியது உள்ளிட்ட காரணங்களால், ரயில்வே அதிகாரிகள் நோட்டீஸ் வழங்காமல், திரும்பி சென்றனர்.மூன்று தலைமுறைகளாக இங்கு வசிக்கிறோம். எங்கள் பகுதிக்கு சுரங்கப்பாதை வருவதில் ஆட்சேபனை கிடையாது. ஆனால், அளவை குறைக்க வேண்டும். சுரங்கப்பாதைக்கு தேவையான இடத்தை, நாங்களே இடித்து கொடுக்கிறோம். அதிகாரிகள், உட்புறங்களில் இருக்கும் இடத்திற்கும் 'நோட்டீஸ்' வழங்க முயற்சிப்பதால், செய்வதறியாது தவிக்கிறோம்.திருவொற்றியூர் மக்கள்சுரங்கப்பாதை பணியின் போது, 9 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்படும். அப்போது, வீடுகள் பாதிக்கக் கூடும். தவிர, ராட்சத கிரேன்கள் திரும்ப, பக்கவாட்டில் போதிய இடவசதி வேண்டும். அதற்காகவே, உட்புறத்தில் உள்ள, சில கட்டடங்களுக்கும் 'நோட்டீஸ்' வழங்கி அகற்ற கோருகிறோம்.ரயில்வே அதிகாரிகள்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X