பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது எப்போது?

Added : அக் 07, 2021
Share
Advertisement
செம்பாக்கம்-செம்பாக்கம் ஏரியில் இருந்து, நன்மங்கலம் ஏரிக்கு செல்லும், உபரி நீர் கால்வாயில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்த கால்வாயின் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்புகளில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலையூர், சிட்லபாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் ஏரிகளின் உபரி நீரை உள்வாங்கி, நன்மங்கலம் ஏரிக்கு அனுப்புவதில், செம்பாக்கம் ஏரிக்கு

செம்பாக்கம்-செம்பாக்கம் ஏரியில் இருந்து, நன்மங்கலம் ஏரிக்கு செல்லும், உபரி நீர் கால்வாயில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்த கால்வாயின் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்புகளில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலையூர், சிட்லபாக்கம், ராஜகீழ்ப்பாக்கம் ஏரிகளின் உபரி நீரை உள்வாங்கி, நன்மங்கலம் ஏரிக்கு அனுப்புவதில், செம்பாக்கம் ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு. அரசு ஆவணங்களில், 153 ஏக்கர் பரப்பு இருந்தாலும், ஆக்கிரமிப்பாளர்களால், 80 ஏக்கராக ஏரி சுருங்கிஉள்ளது.ஒவ்வொரு ஆண்டும், பருவமழையின் போது, ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீர், ஊருக்குள் புகுவதால், அப்பகுதியில் வசிப்போர் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். நீண்ட நாட்களாக நிலவும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரான நீரோட்டத்திற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து, திருமலை நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:செம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய், 60 அடியில் துவங்கி, நன்மங்கலம் ஏரியில் கலக்கும் இடத்தில், 4 அடியாக உள்ளது. 2010 முதல், இந்த உபரி நீர் கால்வாயை துார் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகிறோம்.கடந்த, 2015 வெள்ள பாதிப்பிற்கு பின், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா, இக்கால்வாயை பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை அளந்து, இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவர், இடமாற்றம் செய்யப்பட்ட பின், வந்த அதிகாரிகள் யாரும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2011 முதல்,10 ஆண்டுகளில், அரசிடமும், தாம்பரம் தொகுதி முன்னாள் மற்றும் இன்னாள், எம்.எல்.ஏ.,க்களிடம் மனு அளித்தும், இதற்கு, நடவடிக்கை இல்லை. பருவமழைக்கு முன், செம்பாக்கம் ஏரியின் உபரி நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, துரித கதியில், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X