பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை அகற்ற ரூ.5 கோடிக்கு திட்ட அறிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை-பல்லாவரம் ஏரியில், 'பயோ மைனிங்' முறையில் ஒரு பகுதி குப்பை அகற்றப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள குப்பையை அகற்ற, 5 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பல்லாவரம் நகராட்சி, 42 வார்டுகளை கொண்டது. இங்கு, நாள் ஒன்றுக்கு, 105 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை, பல்லாவரம் ஏரியின் தெற்கு பகுதியில் கொட்டப்பட்டது. இது, சிறிது சிறிதாக

குரோம்பேட்டை-பல்லாவரம் ஏரியில், 'பயோ மைனிங்' முறையில் ஒரு பகுதி குப்பை அகற்றப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள குப்பையை அகற்ற, 5 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.பல்லாவரம் நகராட்சி, 42 வார்டுகளை கொண்டது. இங்கு, நாள் ஒன்றுக்கு, 105 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பை, பல்லாவரம் ஏரியின் தெற்கு பகுதியில் கொட்டப்பட்டது. இது, சிறிது சிறிதாக அதிகரித்து, 5 ஏக்கர் பரப்பளவிற்கு குவிந்தது.இப்படி, 30 ஆண்டுகளாக கொட்டப்பட்டதால், ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமான குப்பை, மலை போல் தேங்கியது. அவற்றை, அடிக்கடி தீயிட்டு எரித்ததாலும், துர்நாற்றத்தாலும், சுற்றியுள்ள பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர்.மற்றொரு புறம், ஏரி நீரும் நாசமடைந்து, சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது. இதனால், குப்பையை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, 'பயோ மைனிங்' முறையில், குப்பையை பிரித்து அகற்றும் திட்டத்தை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. துாய்மை இந்தியா திட்டத்தில், 7 கோடி ரூபாய் செலவில், இதற்காக அறிக்கை தயாரித்து, அரசிடம் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஆண்டு, இதற்கான பணி துவங்கியது. 'சிக்மா குளோபல் என்விரோன் சொல்யூஷன் பிரைவேட் நிறுவனம்' இப்பணியை செய்தது. இதன் மூலம், ஒரு பகுதியில் இருந்த குப்பை மேடு, முழுதுமாக பிரித்து அகற்றப்பட்டது. அதேநேரத்தில், தண்ணீரில் பல டன் குப்பை தேங்கிஉள்ளது.அதனால், அவற்றையும் 'பயோ மைனிங்' முறையில் பிரித்து அகற்ற திட்டமிட்டுள்ளனர்.இதற்காக, ஐந்து கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பியுள்ளனர். அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.இது குறித்து, நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறியதாவது:மேற்பகுதியில் இருந்த குப்பை கிடங்கு, முழுதும் பிரித்து அகற்றப்பட்டுள்ளது.தண்ணீரில் உள்ள குப்பையை, அதே முறையில் அகற்ற, திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பணிகள் துவங்கும். அந்த குப்பையையும் அகற்றிய பின், வடக்கு பகுதி போல், தெற்கு பகுதி ஏரி புனரமைக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X