சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விசாரணைக்கு வந்தவர் 'ஆசிட்' குடித்ததால் பரபரப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
பூந்தமல்லி--பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில், விசாரணைக்காக வந்தவர், கழிப்பறையை சுத்தம் செய்யும், 'ஆசிட்' குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பூந்தமல்லி, ஸ்ரீநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரெனிஷ், 35. அகமதாபாத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியருக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.குடும்ப பிரச்னை காரணமாக,

பூந்தமல்லி--பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில், விசாரணைக்காக வந்தவர், கழிப்பறையை சுத்தம் செய்யும், 'ஆசிட்' குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பூந்தமல்லி, ஸ்ரீநகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரெனிஷ், 35. அகமதாபாத்தில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியருக்கு, 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.குடும்ப பிரச்னை காரணமாக, பூந்தமல்லியில் உள்ள தாய் வீட்டில், குழந்தையுடன் சரண்யா வசித்து வருகிறார்.பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சில நாட்களுக்கு முன், சரண்யா புகார் கொடுத்தார். இதையடுத்து, நேற்று முன்தினம், கணவன்,- மனைவி இருவரையும் அழைத்து, மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரெனிஷ், தன் சட்டை பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த, கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் 'ஆசிட்'டை எடுத்து, வாயில் ஊற்றிக்கொண்டார்.அதிர்ச்சியடைந்த மகளிர் போலீசார், ரெனிஷை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இச்சம்பவம் குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர். குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண, காவல் நிலையம் வந்தவர், உயிரை மாய்த்துக்கொள்ளும் வகையில் ஆசிட் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X