பொது செய்தி

தமிழ்நாடு

புது டாஸ்மாக் கடை எதிர்த்து 'போஸ்டர்'

Added : அக் 07, 2021
Share
Advertisement
எம்.ஜி.ஆர்.நகர்-குடியிருப்பு பகுதியில் 'டாஸ்மாக்' கடை அமைக்க உள்ளது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர்.எம்.ஜி.ஆர்.நகர், பச்சையப்பன் தெருவில் 'டாஸ்மாக்' கடை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, 'டாஸ்மாக்' கடை திறக்க எதிர்ப்பு

எம்.ஜி.ஆர்.நகர்-குடியிருப்பு பகுதியில் 'டாஸ்மாக்' கடை அமைக்க உள்ளது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் 'போஸ்டர்' ஒட்டி வருகின்றனர்.எம்.ஜி.ஆர்.நகர், பச்சையப்பன் தெருவில் 'டாஸ்மாக்' கடை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதையடுத்து, 'டாஸ்மாக்' கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மீறியும் டாஸ்மாக் திறக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதி என்பதாலும், நெரிசல் மிகுந்த பகுதி என்பதாலும், அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:சில ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அரசு முற்பட்டது. மக்கள் போராட்டம் செய்து, அதை தடுத்தனர்.இந்த நெரிசல் மிகுந்த சாலையில் 'டாஸ்மாக்' அமைப்பதால், மக்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும். குடியிருப்புகள் மத்தியில் வருவதால், பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாவர். இதனால், இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கும் திட்டத்தை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X