உயிர் பலி வாங்க காத்திருக்கும் மழை நீர் வடிகால் பள்ளங்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
வளசரவாக்கம்-வளசரவாக்கம் மண்டலத்தில், உயிர் பலி வாங்க காத்திருக்கும் வடிகால் மேல் மூடிகளை சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.வளசரவாக்கம் மண்டலத்தில், பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் மேல் மூடி உடைந்துள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலை மற்றும் ராமாபுரம் பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக உள்ள பிரகாசம் சாலையில், மழை நீர் வடிகால் மேல் மூடி உடைந்து, திறந்த

வளசரவாக்கம்-வளசரவாக்கம் மண்டலத்தில், உயிர் பலி வாங்க காத்திருக்கும் வடிகால் மேல் மூடிகளை சீர்செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.வளசரவாக்கம் மண்டலத்தில், பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகால் மேல் மூடி உடைந்துள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலை மற்றும் ராமாபுரம் பகுதியை இணைக்கும் பிரதான சாலையாக உள்ள பிரகாசம் சாலையில், மழை நீர் வடிகால் மேல் மூடி உடைந்து, திறந்த நிலையில் உள்ளது.இந்த மழை நீர் வடிகால் பள்ளத்தில், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது, மழைக்காலம் என்பதால், சாலையில் மழை நீர் தேங்கினால், பள்ளம் இருப்பதை எளிதில் அறிய இயலாது. இதனால், அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.இதற்கு முன், ஆகஸ்டில், மண்டலத்தில் திறந்த நிலையில் உள்ள மழை நீர் வடிகால் மேல் மூடி குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, அந்த இடங்களை மட்டுமே அதிகாரிகள் சீர் செய்தனர். மழை நீர் வடிகால் மேல் மூடி தானே என, அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.எனவே, மண்டலத்தில் திறந்த நிலையில் உள்ள மழை நீர் வடிகால் மேல் மூடிகளை ஆய்வு செய்து, சீர் செய்ய மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X