குண்டும் குழியுமான ஆற்காடு சாலையில் ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
வளசரவாக்கம்-குடிநீர் வாரிய பணிகளால், குண்டும், குழியுமாக மாறிய ஆற்காடு சாலையில், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வளசரவாக்கம் நகராட்சியாக இருந்த போது போடப்பட்ட பி.வி.சி., குழாய் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகரில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.குடிநீர் வாரியம்

வளசரவாக்கம்-குடிநீர் வாரிய பணிகளால், குண்டும், குழியுமாக மாறிய ஆற்காடு சாலையில், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வளசரவாக்கம் நகராட்சியாக இருந்த போது போடப்பட்ட பி.வி.சி., குழாய் வாயிலாக, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, வளசரவாக்கம், ராமகிருஷ்ணா நகரில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது.குடிநீர் வாரியம் சார்பில், புதிதாக குழாய் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக, ஆற்காடு சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டு, குழாய் அமைக்கப்பட்டது.இதனால், இச்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சாலையில், ஜல்லி கற்கள் கொட்டி சமீபத்தில் சீர் செய்யப்பட்டது. தற்போது பெய்த மழையில், ஜல்லி கற்கள் பெயர்ந்து மீண்டும் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. மேலும், பள்ளமாக உள்ள பகுதியில் வாகனங்கள் செல்லாமல், சீராக உள்ள பகுதியில் வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.காலை மற்றும் மாலை 'பீக் ஹவர்' நேரங்களில், ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. குடிநீர் வாரிய பணிகளை விரைந்து முடிப்பதோடு, நெடுஞ்சாலை துறை உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.குடிநீர் வாரிய பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. பணிகள் முடிந்த பகுதியில் சாலையை சீர் செய்துள்ளோம். இருந்தும், மழையால் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது. மழை நின்றதும் சாலை சீர் செய்யப்படும்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X