சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது போதையில் விபத்து எஸ்.ஐ., மகன் மீது வழக்கு

Added : அக் 07, 2021
Share
Advertisement
நுங்கம்பாக்கம்--மது போதையில் காரை ஓட்டிச் சென்று, டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்படுத்திய எஸ்.ஐ.,மகன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.பாடி, முகப்பேர் சாலையைச் சேர்ந்தவர் முகமது சுஹைல், 18. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மதுபோதையில், தன் நண்பர்களான சுஜித், 18, தருண் ராஜ், 18, ஆகிய இருவருடன் தி.நகருக்கு காரில் புறப்பட்டார். நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் அருகே சென்றபோது,

நுங்கம்பாக்கம்--மது போதையில் காரை ஓட்டிச் சென்று, டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்படுத்திய எஸ்.ஐ.,மகன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.பாடி, முகப்பேர் சாலையைச் சேர்ந்தவர் முகமது சுஹைல், 18. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மதுபோதையில், தன் நண்பர்களான சுஜித், 18, தருண் ராஜ், 18, ஆகிய இருவருடன் தி.நகருக்கு காரில் புறப்பட்டார். நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் அருகே சென்றபோது, முகமது சுஹைலின் கட்டுப்பாட்டை இழந்த கார், டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், தருண் ராஜ் என்பவருக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற இருவரும் காயமின்றி தப்பினர். சம்பவம் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், விபத்து குறித்து விசாரித்ததில், முகமது சுஹைல் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.மேலும், விபத்து ஏற்படுத்தியவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் சாகுல் அமீதின் மகன் என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X