பொது செய்தி

தமிழ்நாடு

அய்யா கோவில் திருவிழா: நாளை கொடியேற்றம் 

Added : அக் 07, 2021
Share
Advertisement
மணலி புதுநகர்-அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், புரட்டாசி மாத ௧௦ நாள் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சென்னை, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ௧௦ நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.இவ்வாண்டு, நாளை காலை அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. அதிகாலை 5:30 மணிக்கு கொடி, பதியை சுற்றி

மணலி புதுநகர்-அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில், புரட்டாசி மாத ௧௦ நாள் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சென்னை, மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ௧௦ நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.இவ்வாண்டு, நாளை காலை அய்யா திருநாம கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. அதிகாலை 5:30 மணிக்கு கொடி, பதியை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடக்கும். அய்யா, காளை வாகனத்தில் மாலையில் பதிவலம் வருவார்.தொடர்ந்து திருவிழா நாட்களில், அய்யா வைகுண்ட தர்மபதி, அன்னம், கருட வாகனம், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், குதிரை, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் பதிவலம் வருவார்.விழாவின் முக்கிய நிகழ்வான சர விளக்கு பணிவிடைதிருக் கல்யாண ஏடு வாசிப்பு போன்றவை எட்டாம் நாளான 15ம் தேதி இரவு நடைபெறும். திருத்தேர் உற்சவம் ௧௦ம் நாளான 17ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கும். அன்றைய தினம் இரவே, அய்யா பூப்பல்லக்கு வாகனத்தில் பதிவலம் வருதல் நடைபெறும். இரவில் திருநாம கொடி அமர்தல் நிகழ்வுடன் திருவிழா நிறைவுறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X