பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் - கூடுவாஞ்சேரி 3வது பாதை மின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை-தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, மூன்றாவது பாதையில், மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இம்மாத இறுதிக்குள், விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படஉள்ளது.தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 256 கோடி ரூபாய் செலவில், மூன்றாவது அகல ரயில் பாதை அமைக்கும் பணி, 2016ம் ஆண்டில் இருந்து நடந்து வந்தது. பாதை பணி துவங்கப்பட்ட போது, ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படும் என,

சென்னை-தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, மூன்றாவது பாதையில், மின்சார ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இம்மாத இறுதிக்குள், விரைவு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்படஉள்ளது.தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 256 கோடி ரூபாய் செலவில், மூன்றாவது அகல ரயில் பாதை அமைக்கும் பணி, 2016ம் ஆண்டில் இருந்து நடந்து வந்தது. பாதை பணி துவங்கப்பட்ட போது, ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. பின், பாதைக்கான மண் பிரச்னை, ஒப்பந்ததாரர் பிரச்னை, கொரோனா தாக்கத்தால் பணி நிறுத்தம் என, பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.இவற்றை கடந்து, கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே, மூன்று மாதங்களுக்கு முன், மூன்றாவது பாதை பணி முடிந்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தி, பயணியர் ரயில் இயக்க அனுமதி வழங்கி உள்ளார். இத்திட்டத்தில், தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, மூன்றாவது பாதை பணி நடந்து வந்தது. பாதை பணி முடிந்து, மின் மயமாக்கும் பணியும் தற்போது முடிந்துள்ளது.இப்பாதையில் தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, நேற்று மதியம் 1:00 மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை, சென்னை ரயில்வே கோட்ட மின்மயமாக்கல் பிரிவு உயர் அதிகாரிகளால், மின்சார ரயில் இன்ஜின் இயக்கி, சோதனை நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.இம்மாத இறுதிக்குள், தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்த ஏற்பாடு நடக்கிறது. பாதுகாப்பு கமிஷனர் சோதனைக்கு பின், இப்பாதையில் பயணியர் ரயில் இயக்க அனுமதி சான்றிதழ் அளித்ததும், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மூன்றாவது பாதையில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X