மொபைல் போன் கொள்ளை கும்பல் பிரியாணி கடை தகராறில் சிக்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் கொள்ளை கும்பல் பிரியாணி கடை தகராறில் சிக்கியது

Added : அக் 07, 2021
Share
அம்பத்துார்--பிரபல மொபைல் போன் விற்பனையகத்தில் கொள்ளையடித்த கும்பல், பிரியாணி கடையில் 'மாமூல்' கேட்டு தகராறில் ஈடுபட்டபோது சிக்கியது.அம்பத்துார், கிருஷ்ணாபுரம், சி.டி.எச்., சாலையில், பிரபல மொபைல் போன் விற்பனையகம் உள்ளது. கடந்த, 3ம் தேதி இரவு, அந்த கடையின் பூட்டை உடைத்த மர்ம கும்பல், அங்கிருந்து, 3.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 புதிய மொபைல் போன்களை திருடி சென்றது.இது

அம்பத்துார்--பிரபல மொபைல் போன் விற்பனையகத்தில் கொள்ளையடித்த கும்பல், பிரியாணி கடையில் 'மாமூல்' கேட்டு தகராறில் ஈடுபட்டபோது சிக்கியது.அம்பத்துார், கிருஷ்ணாபுரம், சி.டி.எச்., சாலையில், பிரபல மொபைல் போன் விற்பனையகம் உள்ளது. கடந்த, 3ம் தேதி இரவு, அந்த கடையின் பூட்டை உடைத்த மர்ம கும்பல், அங்கிருந்து, 3.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 புதிய மொபைல் போன்களை திருடி சென்றது.இது குறித்து அம்பத்துார் போலீசார் கண்காணிப்பு 'கேமரா' பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்ததில், நான்கு பேர் கும்பல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார் அடுத்த ஐ.சி.எப்., காலனியில் உள்ள பிரியாணி கடையில், சிலர், மாமூல் கேட்டு தகராறு செய்வதாக, தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தகராறில் ஈடுபட்ட ஐந்து பேரை மடக்கி பிடித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்பத்துார் அத்திப்பட்டு அருகே உள்ள, குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மனோஜ், 20, பிரேம், 20, அப்துல்லா, 22, குமார், 19, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் பிரியாணி கடை, மளிகை கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.மேலும், அம்பத்துாரில் உள்ள பிரபல மொபைல் போன் விற்பனையகத்தின் ஷட்டர் பூட்டை 'லாவகமாக' உடைத்து, உள்ளே நுழைந்து, 16 மொபைல் போன்கள் திருடியதும் தெரியவந்தது.அவர்களை, நேற்று கைது செய்த போலீசார், 21 மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உட்பட, 40 எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X