சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.32.44 லட்சம் தங்கம் பறிமுதல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை--ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த, 32.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 675 கிராம் தங்கத்தை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவிலிருந்து, 'ஏர் அரேபியா' விமானம், நேற்று மாலை சென்னை வந்தது. அதில் வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி, 29, என்பவர், தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்

சென்னை--ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த, 32.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 675 கிராம் தங்கத்தை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அமீரக அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவிலிருந்து, 'ஏர் அரேபியா' விமானம், நேற்று மாலை சென்னை வந்தது. அதில் வந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி, 29, என்பவர், தங்கம் கடத்தி வருவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அவரிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஆசனவாயில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.அவரிடம் இருந்து, 32.44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 675 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது.இதே போல, வெளிநாட்டு தபால் பார்சலில், சென்னையிலிருந்து, அமெரிக்காவிற்கு அனுப்ப, ஏழு பார்சல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. சந்தேகத்தின் அடிப்படையில், பார்சல்களை சோதனை செய்ததில், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட, 10 ஆயிரத்து, 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X