சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஆவணம்: மோசடி பேர்வழிக்கு '9 ஆண்டு' சிறை

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை-போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவருக்கு, சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார் தபாடியா. இவர், சென்னை திருவொற்றியூரில் வசித்து வருகிறார்.இதற்கிடையே, திருவொற்றியூரில் அவருக்கு சொந்தமான நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நத்மல் ஜெயின், அவரது கூட்டாளிகளான மனோகரன், உலகநாதன் ஆகியோர், போலியான

சென்னை-போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவருக்கு, சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார் தபாடியா. இவர், சென்னை திருவொற்றியூரில் வசித்து வருகிறார்.இதற்கிடையே, திருவொற்றியூரில் அவருக்கு சொந்தமான நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நத்மல் ஜெயின், அவரது கூட்டாளிகளான மனோகரன், உலகநாதன் ஆகியோர், போலியான பட்டா தயாரித்து விற்பனை செய்து உள்ளனர்.இது குறித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.அதைத்தொடர்ந்து, குற்றத்தில் மூளையாக செயல்பட்ட நத்மல்ஜெயின் என்பவருக்கு, 9 ஆண்டுகள் சிறை மற்றும் 9,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X