தமிழ்நாடு

3 ஆணையரகம்! சென்னை, தாம்பரம், ஆவடி போலீஸ் எல்லை பிரிப்பு; காஞ்சி, செங்கை மாவட்ட நிலையங்களும் சேர்ப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பிரித்து, ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகம் உருவாக்கும் வகையில், காவல் நிலையங்கள் எல்லை பிரிக்கப்பட்ட வரைபடம் வெளியாகி உள்ளது.இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட சில நிலையங்கள், தாம்பரம் காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.12 மாவட்டம்சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ், வடக்கில் எண்ணுார்
 3 ஆணையரகம்!  சென்னை, தாம்பரம், ஆவடி போலீஸ் எல்லை பிரிப்பு; காஞ்சி, செங்கை மாவட்ட நிலையங்களும் சேர்ப்பு

சென்னை-சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை பிரித்து, ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகம் உருவாக்கும் வகையில், காவல் நிலையங்கள் எல்லை பிரிக்கப்பட்ட வரைபடம் வெளியாகி உள்ளது.

இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட சில நிலையங்கள், தாம்பரம் காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.12 மாவட்டம்சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ், வடக்கில் எண்ணுார் முதல், தெற்கில் பீர்க்கன்காரணை வரையிலும், மேற்கில் திருநின்றவூர் முதல் கிழக்கில் கானத்துார் வரையிலும், 12 காவல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில், 135 காவல் நிலையங்களும், 35 மகளிர் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தாம்பரம், ஆவடி ஆகியவை நகராட்சியாக இருந்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கேற்ப தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையரகம் உருவாக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதை தொடர்ந்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை உருவாக்க, சிறப்பு அதிகாரியாக காவல்துறை தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி., ரவி நியமிக்கப்பட்டார். ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை உருவாக்க, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்தின் எல்லைகளை தீர்மானிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில், பெருநகர சென்னை காவல் ஆணையரக எல்லைக்குள் இருந்த காவல் மாவட்டங்களை, புதிதாக உருவாக்கப்படும் காவல் ஆணையரகத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பரிசீலனை

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லைக்குள் இருந்த சில காவல் நிலையங்கள், தாம்பரம் ஆணையரகத்துடன் இணைக்கப்பட உள்ளன.அதன்படி, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, வண்டலுார் ஆகிய காவல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, அந்த மூன்று காவல் மாவட்டங்களை இணைத்து, தாம்பரம் காவல் ஆணையரகமாக செயல்பட திட்டமிடப்பட்டு உள்ளது.அதேபோல், மாதவரம், அம்பத்துார், பூந்தமல்லி காவல் மாவட்டங்களை இணைத்து, ஆவடி காவல் ஆணையரகம் செயல்பட திட்டமிடப்பட்டு உள்ளது.இதன் அடிப்படையிலான சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லை குறித்த வரைபடங்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சென்னை, தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கான எல்லைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான, இறுதி முடிவு எடுக்கப்படவில்லை

. இறுதி முடிவு எடுத்த பின், முதல்வர் அனுமதி பெற்று அறிவிக்கப்படும். தற்போதைய சூழலில், அனைத்தும் பரிசீலனை என்ற பெயரிலேயே உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.சென்னை ஆணையரகம் சென்னை போலீஸ் கமிஷனரகத்தை பொறுத்தவரை, வடக்கில் திருவொற்றியூரில் இருந்து, தெற்கில் சென்னை விமான நிலையம் வரையிலும், மேற்கில் மதுரவாயல் முதல் கிழக்கில் கானத்துார் வரையிலும் தன்எல்லையை கொண்டுள்ளது

.இதில், கிழக்கில் வரும் நீலாங்கரை, கானத்துார் ஆகிய கிழக்கு கடற்கரை பகுதிகள், தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின் எல்லையை ஒட்டி வரும் நிலையில், அவை சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் தொடர்கிறது.இந்த வரைப்படத்தின்படி, போலீஸ் கமிஷனரகங்கள் அமைக்கப்பட்டால், முக்கிய காவல் எல்லை பாதுகாப்புகளை, சென்னை போலீஸ் கமிஷனரகமே கவனித்துக் கொள்ளும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X