பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சி, செங்கையில் பல இடங்களில் குளறுபடி *ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நிறைவு

Added : அக் 07, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் நேற்று, உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15 ஊராட்சிகளில், வாக்காளர் பெயர் குழப்பம், வேட்பாளர் விபரம் மறைப்பு, கள்ள ஓட்டு சர்ச்சை, ஓட்டுப்பதிவில் தாமதம் என, பல குளறுபடிகளுக்கிடையே, முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நிறைவடைந்தது. காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளில் நேற்று, உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15 ஊராட்சிகளில், வாக்காளர் பெயர் குழப்பம், வேட்பாளர் விபரம் மறைப்பு, கள்ள ஓட்டு சர்ச்சை, ஓட்டுப்பதிவில் தாமதம் என, பல குளறுபடிகளுக்கிடையே, முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நிறைவடைந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதில், சென்னை புறநகர் பகுதிகளாக, பரங்கிமலை ஊராட்சி ஒன்றித்திற்கு உட்பட்ட, 15 ஊராட்சிகளிலும் நேற்று முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், நேற்று காலை, 6.30 மணிக்கே, வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டுப்பதிவு செய்தனர். இதனால், காலை விறுவிறுப்பாகவும், மதியம் மந்த கதியிலும், மாலை மீண்டும் விறுவிறுப்பாகவும் ஓட்டுப்பதிவு நடந்தது. முடிச்சூர், வேங்கைவாசல் உட்பட, பல ஊராட்சிகளில் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை, ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது. ஓட்டுச்சாவடியிலேயே, ஓட்டுக்கு பணம் தருதல், வாக்காளர்களிடம் பிரசாரம் செய்தல் போன்ற விதிமீறில்கள் அரங்கேறின. சில வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடிக்கு வெளியே, குறிப்பிட்ட கட்சி வேட்பாளர்களின் பெயர் விபரம் வெளியிடப்படாததால், வேட்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. பின், போலீசார் மற்றும் அதிகாரிகள் சமாதானம் பேசி, சர்ச்சைக்கு முடிவு கட்டினர். மூவரசம்பட்டு பகுதியில், வாக்குச்சாவடி வரையறை செய்வதில் சிக்கல் இருந்ததால், ஒரே தெருவில் வசிப்பவர்கள் மூன்று வார்டுகளில் ஓட்டளிக்கும் சூழல் ஏற்பட்டது. அதே போல், ஓட்டுச்சாவடி புத்தகத்தில், ஒரே வாக்காளருக்கு, இரண்டு வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற குழப்பங்களும் இடம் பெற்றன. பொழிச்சலுார் ஊராட்சியில் 4 மையங்களில் 40 ஓட்டுச்சாவடிகளும், கவுல் பஜாரில் ஒரு மையத்தில் நான்கு ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில், வார்டு உறுப்பினருக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் முறையாக ஒட்டப்படவில்லை. இதனால், வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம், வரிசை எண் குறித்த விபரங்கள் தெரியாமல் வாக்காளர்கள் குழப்பம் அடைந்தனர். பல குளறுபடிகளுக்கு இடையே, முதற்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று மாலை நிறைவடைந்தது. பல ஓட்டுச்சாவடிகளில், போதிய வசதிகள் செய்யாததால், வாக்காளர்கள் அவதிக்குள்ளாயினர். ஓட்டுச்சாவடி ஊழியர்கள், அதிகாரிகள் என, பல தரப்பினரும், முகக்கவசம் அணியாமலும், போதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமலும் இருந்ததால், கொரோனா தடுப்பு விதிமுறைகள் காற்றில் பறந்தன. முடிச்சூரில் கள்ள ஓட்டுமுடிச்சூர் ஊராட்சியில் உள்ள, ஆறாவது ஓட்டுச்சாவடியில், 300க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், வரிசையில் நின்று ஓட்டளித்து கொண்டிருந்தனர். அப்போது, ஜெயமலர் என்பவர், ஓட்டளிக்க சென்போது, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அவர், ஏற்கனவே ஓட்டளித்துவிட்டதாக கூறினர்.அதிர்ச்சியடைந்த ஜெயமலர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஜெயமலர் தரப்பிற்கும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டதால், மாலை 6:00 மணிக்கு மேல் வந்து, ஜெயமலரை ஓட்டளிக்குமாறு அதிகாரிகள் கூறினர். இதையடுத்து, அவர் மாலை வந்து, ஓட்டளித்தார். எனினும், ஜெயமலருக்கு பதில், ஓட்டளித்த நபர் யார் என, விசாரணை நடந்து வருகிறது.15 ஊராட்சிகள்பரங்கிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட, சென்னை காவல் எல்லையில் இயங்கும், மூவரசம்பட்டு, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், முடிச்சூர், திருவஞ்சேரி, அகரம் தென், மதுரபாக்கம், பொழிச்சலுார், திரிசூலம், கவுல்பஜார், மேடவாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில், நேற்று ஓட்டுப்பதிவு நிறைவடைந்தது.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, விடுபட்ட ஊராட்சி ஒன்றியங்களில், வரும், 9ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.திரிசூலத்தில் தாமதம்திரிசூலம் ஊராட்சியில், ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில், ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. நேற்று இந்த ஓட்டுச்சாவடியில், ஆயிரம் பேர் ஓட்டளிக்க வேண்டிய நிலையில், ஊராட்சி மன்ற தலைவருக்கான ஓட்டுச்சீட்டு, 50 மட்டுமே வழங்கப்பட்டு இருந்ததால், காலை, 9:15 மணிக்கு, அந்த சீட்டு காலியானது.இதனால், வரிசையில் காத்திருந்தவர்கள், ஓட்டு போட முடியாமல் தவித்தனர். பின், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, ஊராட்சி மன்ற தலைவருக்கான ஓட்டுச்சீட்டு கொண்டு வரப்பட்டு, காலை, 10:15 மணிக்கு, மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது. இதனால், இந்த மையத்தில், ஒரு மணி நேரம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.காஞ்சியில் விதிமீறல்நேற்று மாலை 3:00 மணி நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 58 சதவீத ஓட்டுப்பதிவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 46.30 சதவீதம் ஓட்டுப்பதிவும் நடந்துள்ளது.* காஞ்சிபுரம் மாவட்டம், ஆற்பாக்கம் ஊராட்சியில் சீப்பு சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு சீப்பு வழங்கி ஓட்டு கேட்டனர்* மாகரல் ஊராட்சியில் சிறுவர்கள் சிலர், மூக்கு கண்ணாடி சின்னம் பொறித்த பனியனை அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்* காவாம்பயிர், கடல்மங்கலம் ஊராட்சிகளில் ஓட்டளிக்க வந்த வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் ஆட்டோ, வேன் ஏற்பாடு செய்திருந்தனர்* ஆதவப்பாக்கம் ஊராட்சியில், ஓட்டுச்சாவடி அமைந்துள்ள 200 மீட்டருக்குள் கட்சி சின்னங்கள் அழிக்கப்படாமல் இருந்தது* மேல்ஒட்டிவாக்கம் ஓட்டுச்சாவடி வெளியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள், ஓட்டு சேகரித்தனர்; அதிகாரிகள் யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை.* செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி தொடக்கப் பள்ளி ஓட்டுச்சாவடியில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வுசெய்து, முகவர் ஒருவர் வைத்திருந்த மொபைல் போனை அப்புறப்படுத்தினார்
- நமது நிருபர் குழு - .

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X