மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் மஹாளய அமாவாசை: முன்னோருக்கு தர்ப்பணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் மஹாளய அமாவாசை: முன்னோருக்கு தர்ப்பணம்

Added : அக் 07, 2021
Share
திருவள்ளூர்-மகாளய அமாவாசையை முன்னிட்டு, காக்களூர் ஏரிக்கரையில், ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு, வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர்.தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருவள்ளூர், ஹிருதாபநாசினி கோவில் குளத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வீரராகவர் தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த

திருவள்ளூர்-மகாளய அமாவாசையை முன்னிட்டு, காக்களூர் ஏரிக்கரையில், ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு, வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர்.தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருவள்ளூர், ஹிருதாபநாசினி கோவில் குளத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், வீரராகவர் தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, திருவள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், காக்களூர் ஏரிக்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின், வீரராகவர் கோவிலுக்கு வெளியில் நின்றபடி, பெருமாளை வழிபட்டனர்.திருத்தணி நகரில், முருகன் கோவில் மலையடி வாரத்தில் உள்ள திருக்குளம், பழைய தர்மராஜா கோவில் அருகே உள்ள குளம் மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில், வெண்மனம்புதுார், கடம்பத்துார், மேல்நல்லாத்துார், மணவாள நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குளக்கரை மற்றும் ஆறுகளின் கரையோரங்களில், பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்; மேலும் தங்கள் வீடுகளிலும் முன்னோர்களுக்கு படையலிட்டும் பொதுமக்கள் வழிபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X