பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையம் 'ஹவுஸ் புல்!'

Added : அக் 07, 2021
Share
Advertisement
பொதட்டூர்பேட்டை--சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இடம் இல்லாததால், நெல் கொள்முதல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், சமீபத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நிரந்தர கட்டடம்பொதட்டூர்பேட்டை அருகே, கொசஸ்தலை ஆறு

பொதட்டூர்பேட்டை--சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய இடம் இல்லாததால், நெல் கொள்முதல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், சமீபத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நிரந்தர கட்டடம்பொதட்டூர்பேட்டை அருகே, கொசஸ்தலை ஆறு அமைந்துள்ளதால், அதன் கரையோர பகுதிகளில், நெல் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.புண்ணியம், பாண்டரவேடு, சொரக்காய்பேட்டை, கீளப்பூடி, கரிம்பேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில், கொள்முதல் செய்யப்படும் நெல் இருப்பு வைக்க போதிய இடவசதி இல்லை என்ற காரணத்திற்காக, கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துஉள்ளனர்.தற்காலிகமாக, சமுதாயக்கூடத்தில் செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X