சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணம் திருடியவர் கைது

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருத்தணி-திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 55. இவர், நேற்று, மதியம் 1:30 மணிக்கு, வீட்டை பூட்டிக் கொண்டு பஜாருக்கு வந்திருந்தார்.அப்போது, இரு வாலிபர்கள், சுப்ரமணி வீட்டின் பூட்டு உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிக் கொண்டு வெளியே வந்தனர்.அப்போது தெருவில் இருந்த சில இளைஞர்கள்,மர்ம

திருத்தணி-திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 55. இவர், நேற்று, மதியம் 1:30 மணிக்கு, வீட்டை பூட்டிக் கொண்டு பஜாருக்கு வந்திருந்தார்.அப்போது, இரு வாலிபர்கள், சுப்ரமணி வீட்டின் பூட்டு உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிக் கொண்டு வெளியே வந்தனர்.அப்போது தெருவில் இருந்த சில இளைஞர்கள்,மர்ம வாலிபர்களை விரட்டிச்சென்றனர். இதில் ஒருவர்மட்டும் பிடிபட்டார். இதையடுத்து, மடக்கிபிடித்த வாலிபரை திருத்தணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த கோபி மகன் பிரசாத், 21 என்றும்,சோளிங்கர் அடுத்த, பிலாஞ்சி கிராமத்தில் தாத்தா வீட்டில் தங்கியிருப்பதும், நகை, பணம் திருடியதையும் ஒப்புக் கொண்டார்.மேலும், பிரசாத்திடம் இருந்த, 15 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும், நகையுடன் தப்பியோடிய பிரசாத்தின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X