பொது செய்தி

தமிழ்நாடு

சொல்லி அடிக்கும் கில்லி யாரு?

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் கொளத்துார் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல், இட ஒதுக்கீடு பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல், வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறுவோர் இணைந்து, ஊராட்சி துணை தலைவரை தேர்வு செய்வர். ஊராட்சி தலைவர் இல்லாத நிலையில், துணை தலைவர்,

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் கொளத்துார் ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல், இட ஒதுக்கீடு பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல், வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது.வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெறுவோர் இணைந்து, ஊராட்சி துணை தலைவரை தேர்வு செய்வர். ஊராட்சி தலைவர் இல்லாத நிலையில், துணை தலைவர், தலைவர் பொறுப்பை நிர்வகிப்பார்.கொளத்துார் ஊராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால், துணை தலைவர் பதவியை யார் பெறுகிறாரோ, அவர் பொறுப்பு தலைவராகிவிடலாம் என்ற ஆசை, பலருக்கும் இப்போதே வந்துள்ளது.இதற்கு வார்டு உறுப்பினராக வெற்றி பெற வேண்டும் என்பதால், கொளத்துார் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் சூடு பிடித்துள்ளது.மொத்தம் உள்ள ஒன்பது வார்டுகளில் 37 பேர், வார்டு உறுப்பினர் பதவியை பிடிக்க, 'நீயா, நானா' போட்டியில் உள்ளனர்.போட்டி காரணமாக, கொளத்துார் ஊராட்சியில் வழக்கமாக வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர், வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ஓட்டு கேட்பது வழக்கம்.ஆனால், இந்த முறை துணை தலைவர் பதவிக்கு குறி வைக்கும் வேட்பாளர்கள், வேட்டி புடவைகளை வாக்காளருக்கு வழங்கி, 'போஸ்டர்'கள் ஒட்டி அதிகம் செலவு செய்து தீவிர பிரசாரத்தில் உள்ளனர்.மேலும், வாக்காளர் ஒருவருக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் வரை பணம் வழங்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றுவிட்டால், தற்போது செலவு செய்த பணத்தை விட பல மடங்கு பணத்தை பெற்று, துணை தலைவரை தேர்வு செய்ய லாம் என்ற கணக்கில் வேட்பாளர்கள் உள்ளனர். இதில் சொல்லி அடிக்கும் கில்லி யார் என்பது, தேர்தல்முடிவில் தெரிய வரும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X