பொது செய்தி

இந்தியா

ஜஸ்கிரீம் முதல் மதுபானம் வரை: புதிய ஜி.எஸ்.டி., குறித்து அமைச்சகம் விளக்கம்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தொழில் நிறுவனங்கள் சந்தேகங்களை எழுப்பி வந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐஸ்கிரீம் ஏற்கனவே தயாரித்து அளிக்கப்படும் பொருள் என்பதால் 18% ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய நிதி அமைச்சகம் தனது

புதுடில்லி: சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தொழில் நிறுவனங்கள் சந்தேகங்களை எழுப்பி வந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.latest tamil news


அதில் ஐஸ்கிரீம் ஏற்கனவே தயாரித்து அளிக்கப்படும் பொருள் என்பதால் 18% ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யும் பார்லர்கள் உணவகங்களாக கருத முடியாது. அவர்கள் எந்த விதமான சமையலிலும் ஈடுபடுவதில்லை. ஐஸ்கிரீமை ஒரு பொருளாக வழங்குகின்றனர். சேவையை வழங்கவில்லை.

அதன்படி, பார்லர் அல்லது அது போன்ற விற்பனை நிலையம் மூலம் விற்கப்படும் ஐஸ்கிரீம்களுக்கு 18% ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். உணவு டோர் டெலிவெரி செய்யும் சேவைகளுக்கு உணவகங்களை போல 5% ஜி.எஸ்.டி., பொருந்தும்.


latest tamil news


செயற்கைக்கோள் ஏவுதல் தொடர்பான சேவைகள் இந்தியாவிற்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டால், அது சேவையை ஏற்றுமதி செய்வதாகும், அதற்கு ஜி.எஸ்.டி., பூஜ்ஜியம். சேவையை பெறுபவர் இந்தியாவில் இருந்தால், செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு வரி விதிக்கப்படும்.

1 ஜூலை 2017 முதல் 31 டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் சுரங்க உரிமைகளை வழங்கும் சேவைக்கு 18% வரி விதிக்கப்பட்டது. கேசினோ, ரேஸ் கிளப், ஐ.பி.எல்., போன்ற விளையாட்டு நடக்கும் இடங்களுக்கு 28% ஜி.எஸ்.டி., பொருந்தும். மதுபான தயாரிப்பு பணிகளுக்கு 5% ஜி.எஸ்.டி., பொருந்தாது. 18% ஜி.எஸ்.டி., விதிக்கப்படும். என கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
07-அக்-202113:46:54 IST Report Abuse
M  Ramachandran பெட்ரோல் ஜி எஸ் டி க்கு நோ சொன்ன தமிழ்நாட்டின் பொய் புளுகுவது தெரின்து (பூனை வெளிவந்து விட்டது) தேர்தல ளுக்காக எல்லாம் மக்களை ஏமாற்ற போட்ட கூக்குரல் எல்லாம் புளுகு மூட்டைகள்.கேவலும் ஒட்டு வாங்க அண்டப்புளுகு ஆகாச புளுகுகலை அவிழித்து விட்டாது.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
07-அக்-202110:21:20 IST Report Abuse
தமிழ்வேள் மதுபானங்களுக்கு நூறு சதவீதம் ஜி எஸ் டி விதிக்கலாம் ..தவறில்லை ...அதே போல சிகரெட் மற்றும் பீடிக்கும் ...மிக அதிக ஜி எஸ் டி விகிதம் தேவை
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
07-அக்-202112:29:56 IST Report Abuse
Dhurveshஒருத்தன் gst யில் இருந்து தப்பிக்க கூடாது , அடுத்து COCONUT OIL , PEN இதற்கும் கேடிஜி GST போடப்போகிறார் / tooth PASTE க்கு 28 % போட்ட கேடி அதை போராடி இப்போ 18 % , கடலை மிட்டாய் க்கு இன்னும் 5 % gst வசூலிக்கும் மோடி தான் ஏழைகளின் தலைவன் , MODI யின் எண்ணம் 1000 corporate தப்பிக்கணும் அனால் ஒரு ஏழை GST யில் இருந்து விடுபடக்கூடாது. அனைத்து பேனா-க்களுக்கும் 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் பேப்பர் பொருட்களான கார்டு, கேட்லாக், மற்றும் பிரிட்டிங் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது பள்ளி பிள்ளைங்கள் அதிகம் பேணா உபயோகிப்பார்கள் என்பதால் அதற்கு 18 % வரி , எந்த பொருள் அதிக உபயோகத்தில் இருக்கோ அதன் மீது GST போடு அப்போ தான் கல்லா கட்டலாம் என்கிற உயரிய கேடு கெட RED TAPISAM thinking மோடி கிட்ட இருக்கு...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202108:31:41 IST Report Abuse
duruvasar நாங்கள் ஜிஎஸ்டியை எதிர்க்கிறோம் அவ்வளவுதாங்க. மாநில ஜிஎஸ்டி , மத்திய ஜிஎஸ்டி இந்த விளக்கங்கள் எங்களுக்கு தேவையில்லாதது. எங்களுடைய ஏகாதிபத்தித்தை நிலைநிறுத்தும் வரையில் எதிர்ப்போம். இதற்க்கு மேல் உங்கள் எந்த விளக்கமும் அவசியமில்லாதது. பேசிக்கொண்டிருப்பது ஒரு பகுத்தறிவாளனுடன் என்ற கவனம் இருக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X