இளம்பெண் பலாத்காரம் யோகா ஆசிரியர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் பலாத்காரம் யோகா ஆசிரியர் கைது

Added : அக் 07, 2021
Share
சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு:கடந்த ஜனவரியில் கோடம்பாக்கம், ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த யோகராஜ், 45, என்ற யோகா ஆசிரியர், எனக்கு அறிமுகமானார். அவரிடம், யோகா கற்றுக் கொள்ள, பிப்., 14ம் தேதி வகுப்பில் சேர்ந்தேன். ஒரு நாள், என்னை காதலிப்பதாக கூறி, என் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார்; அதை
 இளம்பெண் பலாத்காரம் யோகா ஆசிரியர் கைது

சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு:கடந்த ஜனவரியில் கோடம்பாக்கம், ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த யோகராஜ், 45, என்ற யோகா ஆசிரியர், எனக்கு அறிமுகமானார்.

அவரிடம், யோகா கற்றுக் கொள்ள, பிப்., 14ம் தேதி வகுப்பில் சேர்ந்தேன். ஒரு நாள், என்னை காதலிப்பதாக கூறி, என் மொபைல் போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார்; அதை நான் ஏற்கவில்லை.இந்நிலையில் ஏப்., 28ம் தேதி, தனக்கு பிறந்த நாள் எனக்கூறி, அவரது வீட்டுக்கு அழைத்த யோகராஜ், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்தார்.அதை வைத்து, மிரட்டி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்; மேலும், பணமும் பறித்தார்.

தற்போது திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்.மறுத்தால், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வருகிறார். எனவே, யோகராஜ் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, யோகராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், அவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்
- நமது நிருபர் -.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X