தமிழ்நாடு

டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுகிறது! பகல் கொசுக்களிடம் எச்சரிக்கை தேவை

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றையடுத்து பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டில் 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 40 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து மருத்துவத்துறை பிரிவு தலைவர் நடராஜன் கூறுகையில், ''கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 71
டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவுகிறது! பகல் கொசுக்களிடம் எச்சரிக்கை தேவை

மதுரை : மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றையடுத்து பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டில் 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 40 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து மருத்துவத்துறை பிரிவு தலைவர் நடராஜன் கூறுகையில், ''கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 71 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். தொற்று குறைந்துள்ளது.

மூன்றாண்டுகளுக்கு முன் இருந்ததை போல டெங்கு தீவிர காய்ச்சல் பரவவில்லை. பாதிக்கப்பட்ட 4 பேரும் நலமாக உள்ளனர். தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். நோயாளிகள் அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் தயாராகவுள்ளன,'' என்றார்.

அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் பாலசங்கர் கூறியதாவது: கடந்த வாரம் இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். வாரம் ஒன்றிரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் சீசன் வைரஸ் காய்ச்சலும் சேர்ந்து வரும் என்பதால் பயப்பட கூடாது.

காலையில் நன்றாக இருக்கும் குழந்தை மாலையில் திடீரென அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் டெங்குவாக இருக்கலாம். காய்ச்சலின் போது சரியாக சாப்பிட மாட்டார்கள். காய்ச்சல் குறைந்த 3, 4 நாட்கள் கழித்தும் சரியாக சாப்பிடாதிருத்தல், வயிறு வலி, வாந்தி, சோர்வு இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X