பொது செய்தி

தமிழ்நாடு

மாநில நீச்சல் போட்டிகளில் 5 தங்கம் வென்ற ரோஷினி தனி நபர் சாம்பியன்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை: சென்னை வேளச்சேரியில் மாநில நீச்சல் சங்கம் சார்பில் சப் ஜூனியர்,ஜூனியர் மற்றும்சீனியர் பிரிவு மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தன. மதுரையில் இருந்து 33 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.மதுரை ஆசிய விளையாட்டு வீரர் விக்காஸ் 200 மீட்டர் சீனியர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம், 50, 100 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவுகளில்

மதுரை: சென்னை வேளச்சேரியில் மாநில நீச்சல் சங்கம் சார்பில் சப் ஜூனியர்,ஜூனியர் மற்றும்சீனியர் பிரிவு மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடந்தன. மதுரையில் இருந்து 33 நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

மதுரை ஆசிய விளையாட்டு வீரர் விக்காஸ் 200 மீட்டர் சீனியர் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப்பதக்கம், 50, 100 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.200 மற்றும் 400 மீட்டர் தனித்திறன் மெட்லி ஜூனியர் பிரிவு, 100 மீட்டர், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவு மற்றும் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டிகளில் ரோஷினி 5 தங்கப்பதக்கங்களை வென்றார்.

சப்ஜூனியர் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் சிவபாலன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.1500 மீட்டர் ஜூனியர் ப்ரீஸ்டைல் பிரிவில் குணபாலன் வெள்ளிப்பதக்கம், 400 மீட்டர் ப்ரீஸ்டைலில் வெள்ளி, 800 மீட்டர் ப்ரீஸ்டைலில் வெண்கலம் வென்றார். 100 மற்றும் 200 மீட்டர் ஜூனியர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் கிஷான் தங்கம், 50 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெள்ளி வென்றார்.

ஐந்து தங்கப்பதக்கம் வென்ற விகாசா பள்ளி மாணவி ரோஷினி தனிநபர் சாம்பியன் பட்டத்தை வென்றார். தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்ற விக்காஸ், குணபாலன், கிஷான், ரோஷினி, சிவபாலன் ஆகியோர் அக்., 19 - 29 வரை பெங்களூருவில் நடக்கும் தேசிய போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

வெற்றி பெற்றவர்களை மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், விளையாட்டு அலுவலர் லெனின், சங்க செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் வேல்முருகன் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X