பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டில் திரிந்த 29 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்; தினமலர் செய்தி எதிரொலி

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளிலுள்ள ரோடுகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடு உட்பட கால்நடைகளை திரிய விட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற தினமலர் செய்தி எதிரொலியாக ரோட்டில் திரிந்த 29 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.50,800 அபராதம் விதிக்கப்பட்டது.கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது: ரோடுகளில் மாடுகள் திரிவதால் இரண்டு, நான்கு சக்கர

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளிலுள்ள ரோடுகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடு உட்பட கால்நடைகளை திரிய விட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற தினமலர் செய்தி எதிரொலியாக ரோட்டில் திரிந்த 29 மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.50,800 அபராதம் விதிக்கப்பட்டது.

கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது: ரோடுகளில் மாடுகள் திரிவதால் இரண்டு, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மாடுகளை ரோட்டில் விடக்கூடாது என உரிமையாளர்களை தொடர்ந்து எச்சரிக்கிறோம். சுகாதார பிரிவு அலுவலர் குழுவினர் மூலம் நேரடியாக களஆய்வு செய்து மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடுகளில் சுற்றி திரிந்த இந்த மாடுகள் பிடிக்கப்பட்டன.மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்போர் தங்களுக்குரிய இடத்தில் மாடுகளை தொழுவத்தில் கட்டி மக்கள், போக்குவரத்திற்கும் இடையூறின்றி வளர்க்க வேண்டும். ரோடுகளில் திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X