மதுரைக்கு நேரடி பஸ் இயக்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரைக்கு நேரடி பஸ் இயக்க எதிர்பார்ப்பு

Added : அக் 07, 2021
Share
பேரையூர் : பேரையூரிலிருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி அரசு டவுன் பஸ் வசதியின்றி பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.தற்போது 48 கி.மீ., துாரத்திலுள்ள மதுரைக்கு அரசு பஸ்களில் செல்ல 2 மணி நேரமாகிறது. டி.கல்லுப்பட்டி வழியாக மூன்று பஸ்கள் மாற வேண்டிய அவலம் உள்ளது. பேரையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிருந்து தினமும் அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள், தொழில்துறையினர்

பேரையூர் : பேரையூரிலிருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி அரசு டவுன் பஸ் வசதியின்றி பொதுமக்கள் பரிதவிக்கின்றனர்.

தற்போது 48 கி.மீ., துாரத்திலுள்ள மதுரைக்கு அரசு பஸ்களில் செல்ல 2 மணி நேரமாகிறது. டி.கல்லுப்பட்டி வழியாக மூன்று பஸ்கள் மாற வேண்டிய அவலம் உள்ளது. பேரையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிருந்து தினமும் அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள், தொழில்துறையினர் மதுரைக்கு சென்று வருகின்றனர்.

அனைவரும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து பிரிந்து செல்கின்றனர். பேரையூரிலிருந்து பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி அரசு டவுன் பஸ் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதற்கட்டமாக டி.கல்லுப்பட்டி வரை பஸ்களை பேரையூருக்க நீடிக்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X