சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் நிதி முறைகேடு; விசாரணை கோரி வழக்கு

Added : அக் 07, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரி இணைப் பேராசிரியர் பிரேம்சிங். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் இளங்கலை தொழில் (பி.வி.ஓ.சி.,) பட்டப்படிப்பு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நிதி உதவியில் நடத்தப்படுகிறது. 2018-19 ல் ரூ.75 லட்சத்து 78 ஆயிரத்து 400 அனுமதிக்கப்பட்டது. இந்நிதியில் முறைகேடு நடந்துள்ளது. சட்டவிரோதமாக சில மூன்றாம் நபர்களின்

மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லுாரி இணைப் பேராசிரியர் பிரேம்சிங். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் இளங்கலை தொழில் (பி.வி.ஓ.சி.,) பட்டப்படிப்பு பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) நிதி உதவியில் நடத்தப்படுகிறது. 2018-19 ல் ரூ.75 லட்சத்து 78 ஆயிரத்து 400 அனுமதிக்கப்பட்டது. இந்நிதியில் முறைகேடு நடந்துள்ளது.

சட்டவிரோதமாக சில மூன்றாம் நபர்களின் பெயர்களுக்கு நிதி மாற்றப்பட்டுள்ளது. இதுபோல் யு.ஜி.சி.,நிதியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. விசாரணை கோரி மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி யு.ஜி.சி.,செயலாளர், மத்திய மனிதவளத்துறை இணைச் செயலாளர், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், சி.பி.ஐ.,இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.,27 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X