பொது செய்தி

தமிழ்நாடு

சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் பானாங்குளம் கண்மாய்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பானாங்குளம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.வைகை அணை நீர் மூலம் இக்கண்மாய் நிரம்பும். மறுகால் பாய்ந்து நிலையூர் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். கண்மாய் மூலம் 150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் நீர்பிடிப்பு பகுதி, கரைகளில்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பானாங்குளம் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

வைகை அணை நீர் மூலம் இக்கண்மாய் நிரம்பும். மறுகால் பாய்ந்து நிலையூர் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். கண்மாய் மூலம் 150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய் நீர்பிடிப்பு பகுதி, கரைகளில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் மண்டி வளர்ந்துள்ளன.விவசாயிகள் கூறியதாவது: சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றின் ஈரப்பதத்தை இம்மரங்கள் உறிஞ்சி நன்கு வளரக்கூடியவை.

வேர்கள் நிலத்தடி நீரை விஷமாக்கி விடும். மரங்களை வேருடன் அகற்றாவிட்டால் வளர்ந்து கொண்டே இருக்கும். தற்போது வளர்ந்துள்ள சீமைக்கருவேலமரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. கருவேல மரங்களை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். தற்போது மழை பெய்வதுடன், பெரியாறு, வைகை அணைகளிலும் தண்ணீர் இருப்பதால் கண்மாய்க்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X