பொது செய்தி

தமிழ்நாடு

முல்லை பெரியாற்றில் குளிக்க வேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

Added : அக் 07, 2021
Share
Advertisement
கூடலுார் : தமிழக---கேரள எல்லை தேனி மாவட்டம் கூடலுாரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் முல்லை பெரியாற்றில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி., ஸ்ரேயா குப்தா நேற்று கூடலுார் தொட்டிப்பாலம், காஞ்சிமரத்துரை பாலம், வைரவன் வாய்க்கால், பளியன்குடி, லோயர்கேம்ப் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட

கூடலுார் : தமிழக---கேரள எல்லை தேனி மாவட்டம் கூடலுாரில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் முல்லை பெரியாற்றில் குளிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி., ஸ்ரேயா குப்தா நேற்று கூடலுார் தொட்டிப்பாலம், காஞ்சிமரத்துரை பாலம், வைரவன் வாய்க்கால், பளியன்குடி, லோயர்கேம்ப் முல்லைப்பெரியாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆய்வு செய்தார்.பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள 1300 கனஅடி நீர் தவிர, வெள்ள நீரும் முல்லை பெரியாற்றில் செல்வதால் கரையோரப் பகுதியில் மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துமணி, எஸ்.ஐ.க்கள், போலீசார் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X