பொது செய்தி

தமிழ்நாடு

வில்பட்டியில் குவிந்த திராவிட கட்சியினர்

Added : அக் 07, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : வில்பட்டி இடைத்தேர்தலில் இருதிராவிடக் கட்சி யினரும் முகாமிட்டுள்ளதால் தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளனர்.வில்பட்டி ஊராட்சி தலைவராக இருந்த குப்பம்மாள் இறந்ததால், அப்பதவிக்கான இடைத்தேர்தல் அக்.9ல் நடக்க உள்ளது. இந்நிலையில் இரு திராவிட கட்சிகளின் நிர்வாகிகள் வில்பட்டி கிராமத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொடைக்கானல்

கொடைக்கானல் : வில்பட்டி இடைத்தேர்தலில் இருதிராவிடக் கட்சி யினரும் முகாமிட்டுள்ளதால் தேர்தல் களத்தை பரபரப்பாக்கி உள்ளனர்.

வில்பட்டி ஊராட்சி தலைவராக இருந்த குப்பம்மாள் இறந்ததால், அப்பதவிக்கான இடைத்தேர்தல் அக்.9ல் நடக்க உள்ளது. இந்நிலையில் இரு திராவிட கட்சிகளின் நிர்வாகிகள் வில்பட்டி கிராமத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கொடைக்கானல் நகராட்சிக்கு அடுத்து அதிக மக்கள் தொகை, வருவாய்க்கு பஞ்சமில்லாத ஊராட்சி என்பதால், நிர்வாகத்தை கைப்பற்ற இரு தரப்பும் முனைப்பு காட்டுகிறது. மும்முனை போட்டி நிலவுவதால் ஆளும் தரப்பு பட்டுவாடாவை துவக்கியுள்ளது.மற்ற வேட்பாளர்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

ஆளும் தரப்பு மீது தலைமை தேர்தல் அதிகாரி வரை புகார் அனுப்பியுள்ளனர். விதி மீறி வளர்ச்சி பணிகள் நடந்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.கொடைக்கானல் நகராட்சி தேர்தலுக்கு இத்தேர்தல் முன்னோட்டமாக கருதப்படுகிறது. எனவே இந்த ஊராட்சி இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X