நீதிமன்றத்திற்கு ஒதுக்கிய இடத்தில் வேறு கட்டுமானத்திற்கு தடை கோரி வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்திற்கு ஒதுக்கிய இடத்தில் வேறு கட்டுமானத்திற்கு தடை கோரி வழக்கு

Added : அக் 07, 2021
Share
மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நீதிமன்றம் அமைக்க ஒதுக்கிய இடத்தில் வேறு கட்டுமானத்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.ஆண்டிபட்டி வழக்கறிஞர் ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆண்டிபட்டியில் தனியார் கட்டடத்தில் நீதிமன்றம் செயல்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடத்தை காலி செய்ய உரிமையாளர் பலமுறை

மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நீதிமன்றம் அமைக்க ஒதுக்கிய இடத்தில் வேறு கட்டுமானத்திற்கு தடை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஆண்டிபட்டி வழக்கறிஞர் ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆண்டிபட்டியில் தனியார் கட்டடத்தில் நீதிமன்றம் செயல்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லை. கட்டடத்தை காலி செய்ய உரிமையாளர் பலமுறை வலியுறுத்தினார். ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் அமைக்க இடம் ஒதுக்கி ஆண்டிபட்டி பேரூராட்சி 2004ல் தீர்மானம் நிறைவேற்றியது. அருகே பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அந்த இடம் நீதிமன்ற கட்டடம் அமைக்க தகுந்தது என பொதுப்பணித்துறை ஆய்வில் தெரிவித்தது.

ஆனால் நீதிமன்ற கட்டடம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு ஒதுக்கிய இடத்தில் தற்போது பேரூராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக வேறு கட்டுமானத்திற்குரிய பணியை துவக்கியுள்ளது. நடவடிக்கை கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன்.வேறு கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். நீதிமன்றம் அமைக்க ஒதுக்கிய இடத்தில் அதற்குரிய கட்டுமானப் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜன் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், தமிழக உள்துறை (நீதிமன்றங்கள்) செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளர், தேனி கலெக்டர், ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,10க்கு ஒத்திவைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X