பொது செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்துக்கு ஏங்கும் தாமரைக்குளம்; ஆக்கிரமிப்பால் தவிக்கும் விவசாயிகள்

Added : அக் 07, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மருதாநதி அணை பாசனத்தில் பயன்பெறும் தாமரைக்குளம் ஆக்கிரமிப்புகளாலும், மடைகள் சேதத்தாலும், தண்ணீர் தேங்கி நிற்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.தாமரைக்குளம் 135 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கண்மாயின் மூன்று மடைகள் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால் குளம் பாதியளவு கூட நிரம்புவதில்லை.

பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையம் மருதாநதி அணை பாசனத்தில் பயன்பெறும் தாமரைக்குளம் ஆக்கிரமிப்புகளாலும், மடைகள் சேதத்தாலும், தண்ணீர் தேங்கி நிற்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர்.

தாமரைக்குளம் 135 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கண்மாயின் மூன்று மடைகள் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இதனால் குளம் பாதியளவு கூட நிரம்புவதில்லை. தற்போதுகூட குளத்திற்கு வரும் தண்ணீர் வெளியேறிவிடுகிறது.ஆக்கிரமிப்பால் குளத்தின் பரப்பு சுருங்கி உள்ளது. இதனால் முப்போகம் விளைந்த நிலங்கள் ஒரு போகம் விளைவதற்குக்கூட வழியின்றி உள்ளது.

குறைந்தது 100 நாட்கள் தண்ணீர் குளத்தில் தேங்கி இருந்தால்தான் ஒருபோக சாகுபடி செய்ய முடியும். ஆனால் மடைகள் சேதமடைந்துள்ளதால் தண்ணீரை தேக்க இயலாமல் போகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ. 250 க்கு விலைக்கு வாங்கி சாகுபடி செய்கின்றனர்.மடையை செப்பனிட, விவசாயிகள் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக முதல்வர் தனிப்பிரிவு வரை மனு கொடுத்தும் பொதுப்பணித் துறையினர் பாராமுகமாக இருக்கின்றனர். உயர் அதிகாரிகளுக்கு அனுப்பும் மனு, மருதாநதி வடிநில கோட்ட அதிகாரிகளிடமே திரும்ப வருவதால் விவசாயிகளை அவர்கள் கேலியாக பார்க்கின்றனர்.அய்யங்கோட்டை பகுதி விவசாயிகள் கூறியதாவது:குடிமராமத்து நடக்கவில்லைஎஸ்.குமார்: கடந்த காலங்களில் பல்வேறு கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. ஆனால் தாமரைக் குளம் மட்டும் குடிமராமத்துப் பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. குடிமராமத்து பணிக்கு இக்குளத்தை தேர்ந்தெடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி மடைகளை செப்பனிட வேண்டும்.ஆக்கிரமிப்பில் குளம்ராமசாமி: சில மாதங்களுக்கு முன்பு குளத்தில் பாசன வாய்க்கால் கட்டுவதற்காக கருங்கற்கள் கொண்டு வரப்பட்டன. இக்கற்களை சிலர் எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் கால்வாய் கட்டும் பணி நின்றுபோனது. புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. குளத்தில் பாதியளவுக்கு மேல் ஆக்கிரமித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தென்னை மரங்கள் பெரிதாகி விட்டன. குளத்திற்குள் கிணறுகள் வெட்டி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அது எப்படி என்றே தெரியவில்லை. பல நிலங்களில் சீமைக் கருவேல முட்கள் வளர்ந்துள்ளன.செயல்படாத சங்கம் எம்.முருகவேல்: இக் குளத்து நீரினை பயன்படுத்துவோரில் பலர் நிலத்தை விற்று விட்டு சென்று விட்டனர். ஆனால் அவர்களே குளத்து நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தில் இன்னும் தொடர்வதால் சங்கம் செயல்பாடின்றி உள்ளது. பொதுப்பணித் துறையினர் சங்கத்தை புதுப்பித்தோ, புதிய சங்கம் ஏற்படுத்தியோ விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும்.மடைகளை சரிசெய்ய ஏற்பாடுபொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு திட்டத்தின் கீழ் மடையை செப்பனிட வேண்டும் என்று உத்தரவு உள்ளதால் காலதாமதம் ஆகிவிட்டது. நிதி பெற 75 சதவீத பணிகள் முடிந்து விட்டன. விரைவில் மடைகள் சரிசெய்யப்படும். குளத்திற்குள் நிலத்தடி நீர்வள திட்டத்தின் கீழ் கிணறு வெட்டப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்புகளை பல ஆண்டுகளாக நாங்கள் எடுத்து வருகிறோம். இருப்பினும் மீண்டும், மீண்டும் ஆக்கிரமிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X